மதுரை மேலப் பெருமாள் மேஸ்திரி வீதியில் உள்ள எல்ஐசி அலுவலகத்தில் கடந்த டிசம்பர் மாதம் ஏற்பட்ட தீ விபத்தில் 54 வயதான உயர் அதிகாரி கல்யாணி நம்பி உயிரிழந்தார். ஆரம்பத்தில் இது ஏசி ஷார்ட் சர்க்யூட் காரணமாக ஏற்பட்ட விபத்து என்று கருதப்பட்டது. ஆனால், இது விபத்து அல்ல, ஒரு திட்டமிட்ட கொலை என்பதை தமிழக காவல்துறை தற்போது கண்டுபிடித்துள்ளது. இது தொடர்பாக அதே அலுவலகத்தில் பணிபுரியும் உதவி நிர்வாக அதிகாரியான டி. ராம் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.