ஞாயிறு, 12 ஏப்ரல் 2026
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 14 மார்ச் 2026 (16:34 IST)

அடுத்த முதல்வர் யார்?.. லயோலா கருத்துக்கணிப்பு சொல்வது என்ன?..

vijay eps
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில் பல்வேறு கருத்துக்கணிப்புகள் தொடர்ந்து வெளியாகி வருகிறது. இதில் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் இரண்டாம் இடத்தை பிடிக்கும் என பல கருத்துக்கணிப்பதற்கு சொல்கிறது., இந்நிலையில், லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்கள் நடத்திய கருத்துக்கணிப்பு முடிவுகள் தற்போது வெளியாகியிருக்கிறது. அதன்படி யார் அடுத்த முதல்வர் என்கிற கேள்விக்கு மு.க ஸ்டாலின், விஜய் இருவருக்குமே முதலிடம் கிடைத்திருக்கிறது.

மேலும், 2ம் இடத்தில் எடப்பாடி பழனிச்சாமியும், மூன்றாம் இடத்தில் அண்ணாமலையும், நான்காம் இடத்தில் சீமான் மற்றும் கனிமொழியும் இருக்கிறார்கள். அதேபோல் ‘நகரப்புறங்களில் யார் அதிக வாக்குகளை வாங்குவார்?’ என்கிற கருத்துக்கணிப்பில் திமுக முதலிடத்தில் இருக்கிறது.. 24.77 சதவீதம் பேர் திமுகவை சொல்லியிருக்கிறார்கள்.

அதில், தவெக 23.48 சதவீத ஆதரவை பெற்று 2ம் இடத்தில் இருக்கிறது. மேலும், அதிமுக 20.55 சதவீதமும், நாம் தமிழர் கட்சிக்கு 6.7 சதவீதமும் ஆதரவு கிடைத்திருக்கிறது. மேலும் 50 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகத்திற்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாகவும், 80 தொகுதிகளில் தவெக இரண்டாம் இடத்தை பெறும் எனவும், அதிமுக 80 தொகுதிகளில் டெபாசிட் இழக்கும் எனவும் சொல்லப்பட்டிருக்கிறது.

எந்த கட்சிக்கு வாக்கு வங்கி அதிகம்? என்கிற கருத்துக்கணிப்பில் தவெகவுக்கு 19.20 சதவீதம் பேரும்,  திமுக என 17.7 சதவீதம் பேரும், அதிமுக என 15.32 சதவீதம் பேரும்,  நாம் தமிழர் கட்சி என 6 சதவீதம் பேரும் சொல்லியிருக்கிறார்கள் என அந்த கருத்துக்கணிப்பில் சொல்லப்பட்டிருக்கிறது.