ஐபிஎல் 2026.. முதல்கட்ட அட்டவணை வெளியீடு.. சிஎஸ்கே விளையாடும் போட்டிகளின் விவரங்கள்..!
ஐபிஎல் 2026 கிரிக்கெட் திருவிழா மார்ச் 28ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களுக்கான முக்கியப் போட்டி அட்டவணை வெளியாகியுள்ளது. இதன்படி, சிஎஸ்கே தனது முதல் போட்டியில் மார்ச் 30, திங்கட்கிழமை அன்று கவுகாத்தியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
இதனை தொடர்ந்து, ஏப்ரல் 3-ம் தேதி சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியுடன் தனது இரண்டாவது மோதலில் ஈடுபடுகிறது.
ஏப்ரல் 5, ஞாயிற்றுக்கிழமை அன்று பெங்களூருவில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடன் ஒரு விறுவிறுப்பான ஆட்டம் நடைபெற உள்ளது.
இறுதியாக, ஏப்ரல் 11-ம் தேதி சனிக்கிழமை அன்று சென்னையில் டெல்லி கேபிடல்ஸ் அணியை சிஎஸ்கே எதிர்கொள்கிறது.
ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சிஎஸ்கே அணி, இந்த முறையும் கோப்பையை வெல்லும் முனைப்பில் களமிறங்குகிறது. அனைத்து போட்டிகளும் இரவு 7:30 மணிக்கு தொடங்குகின்றன.
Edited by Siva