ஈரானின் இதயத்தில் குண்டுபோட்ட அமெரிக்கா!.. கார்க் தீவில் தாக்குதல்!...
ஈரான் அணு ஆயுதம் உற்பத்தி செய்யக்கூடாது என சொல்லி அந்நாட்டின் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் கடந்த மாதம் 28ம் தேதி முதலே தாக்குதல் நடத்தி வருகிறது. ஒருபக்கம் அமெரிக்காவின் ராணுவ தடவாளங்கள் அமைந்திருக்கும் வளைகுடா நாடுகளின் மீது ஈராக் தொடர் ட்ரோன் தாக்குதல் நடத்தி வருகிறது.. வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா உள்ளிட்ட பல நாடுகளுக்கும் கச்சா எண்ணெய்களை கொண்டுவரும் கப்பல்கள் ஈரானின் ஹோர்மூஸ் ஜலசந்தி வழியாகத்தான் செல்கிறது.
ஆனால் ஹோர்மூஸ் ஜலசந்தியை ஈரான் அரசு மூடிவிட்டதால் கச்சா எண்ணெய் கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. இதனால் கடந்த சில நாட்களாகவே இந்தியாவில் கேஸ் மற்றும் பெட்ரோல் தட்டுப்பாடு நிலவி வருகிறது.. மேலும் எரிபொருள் விலையும் உயர்ந்திருக்கிறது.
இந்நிலையில்தான், ஈரானின் முக்கிய தீவு நகரமான கார்க் தீவில் அமெரிக்கா சக்தி வாய்ந்த குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த பகுதி ஈரானின் முக்கிய பகுதியாகும். ஈரான் நாட்டின் 90 சதவீத எண்ணெய் உற்பத்தி இந்த கார்க் தீவில்தான் நடைபெறுகிறது.
இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கார்க் தீவில் அனைத்து ராணவு இலக்குகளையும் முழுமையாக அழித்துவிட்டோம். ஹார்மூஸ் நீரிணை வழியாக கப்பல்கள் சுதந்திரமாககவும், பாதுகாப்பாகவும் பிரச்சனை செய்தால் தாக்குதல் மீண்டும் தீவிரமாகும். உலகம் இதுவரை பார்க்காத சக்திவாய்ந்த நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய ஆயுங்கள் எங்களிடம் இருக்கிறது. எங்கள் தாக்குதலை தடுக்கும் திறன் ஈரானிடம் இல்லை என கூறியிருக்கிறார்.