திங்கள், 13 ஏப்ரல் 2026
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : வெள்ளி, 13 மார்ச் 2026 (14:50 IST)

சன் ரைசர்ஸ் அணியில் பாகிஸ்தான் வீரர்.. காவ்யா மாறன் குறித்து பிசிசிஐ கூறியது என்ன?

சன் ரைசர்ஸ் அணியில் பாகிஸ்தான் வீரர்.. காவ்யா மாறன் குறித்து பிசிசிஐ கூறியது என்ன?
இங்கிலாந்தின் 'தி ஹண்ட்ரட்'  கிரிக்கெட் தொடருக்கான ஏலத்தில், சன்ரைசர்ஸ் லீட்ஸ் அணி பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் அப்ரார் அகமதுவை ஒப்பந்தம் செய்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 
 
1,90,000 பவுண்டுகளுக்கு அவர் வாங்கப்பட்டதன் மூலம், இந்திய உரிமையாளரை கொண்ட ஒரு அணியால் ஒப்பந்தம் செய்யப்பட்ட முதல் பாகிஸ்தான் வீரர் என்ற பெயரை பெற்றுள்ளார்.
 
கடந்த ஆண்டு 'ஆபரேஷன் சிந்தூர்' நிகழ்வின் போது, இந்திய ராணுவம் குறித்து அப்ரார் அகமது சமூக வலைதளங்களில் அவதூறாக பேசியதாக கூறி, சன்ரைசர்ஸ் உரிமையாளர் காவ்யா மாறனுக்கு எதிராக ரசிகர்கள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். 
 
இது குறித்துப் பேசிய பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா, "இது ஒரு வெளிநாட்டு லீக் தொடர்பான விஷயம் என்பதால் இதில் பிசிசிஐ தலையிட முடியாது; அந்தந்த அணிகளே இது குறித்து முடிவெடுக்க வேண்டும்" என தெரிவித்துள்ளார். 
 
2008-க்குப் பிறகு ஐபிஎல் தொடரில் பாகிஸ்தான் வீரர்கள் விளையாட தடை உள்ள நிலையில், இந்திய நிறுவனத்திற்கு சொந்தமான வெளிநாட்டு அணியில் பாகிஸ்தான் வீரர் இணைந்துள்ளது கிரிக்கெட் வட்டாரத்தில் விவாத பொருளாகியுள்ளது.
 
Edited by Siva