1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 17 பிப்ரவரி 2026 (16:47 IST)

AI துறையில் 9 லட்சம் கோடியை இறக்கும் அதானி குழுமம்!.. 2035 டார்கெட்!..

adani
கடந்த சில மாதங்களாகவே AI தொடர்பான புகைப்படங்களும், வீடியோக்களும் சமூக வலைதளங்களில் அதிகமாக காணப்படுகிறது. விஞ்ஞான தொழில்நுட்பத்தின் புதிய பரிணாம வளர்ச்சியாக AI பார்க்கப்படுகிறது.. இல்லாத ஒன்றை இருப்பது போல காட்டுவதற்கு AI தொழில்நுட்பத்தை பலரும் பயன்படுத்துகிறார்கள். இதை வைத்து இறந்தவர்களை கூட அவர்கள் பேசுவது போல காட்ட முடியும் என்பதால் பல துறைகளிலும் இதை பயன்படுத்துகிறார்கள்..

ஒருபக்கம் சாப்ட்வேர் துறையில் Coding எழுதுவதற்கும் கூட AI Robot- களை வல்லுனர்கள் பயன்படுத்துகிறார்கள். இனி வரும் காலத்தில் AI-ஐ தவிர்த்து விட்டு மனிதன் வாழவே முடியாது என்கிற நிலை உருவாகும் என சொல்லலாம். அதோடு AI வந்துவிட்டதால் மனிதர்களுக்கு வேலை வாய்ப்புகள் குறையும் எனவும் செய்திகள் தொடர்ந்து வெளியாகி வருகிறது..

இந்நிலையில்தான், அதானி குழுமம் AI துறையில் முதலீடு செய்ய முன் வந்திருக்கிறது. இந்தியாவில் Hypersacale AI Centre-களை அமைக்க சுமார் 9 லட்சம் கோடி மதிப்பிலான மெகா முதலீட்டு திட்டத்தை அதானி குழுமம் அறிவித்திருக்கிறது. டெல்லி AI Impact மாநாட்டை ஒட்டி அதானி குழுமம் இந்த திட்டத்தை அறிவித்துள்ளது.

மேலும், 2035ம் ஆண்டுகளுக்குள் இதை செயல்படுத்த இலக்கு நிர்ணயித்திருக்கிறது.. இது தவிர சுமார் 13 லட்சம் கோடி மதிப்பில் கம்ப்யூட்டர் சர்வர்கள் உற்பத்தி மற்றும் கிளவுட் சேவைகளில் முதலீடு செய்யவுள்ளதாகவும் அதானி குழுமம் அறிவித்திருக்கிறது..