மீண்டும் தள்ளிப்போகும் கருப்பு ரிலீஸ் தேதி!.. சூர்யா ஃபேன்ஸ் பாவம்..
ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்திருக்கும் திரைப்படம் கருப்பு. இந்த படத்தில் வழக்கறிஞர் மற்றும் கருப்பண்ணசாமி என இரண்டு கதாபாத்திரங்களில் சூர்யா நடித்திருக்கிறார். சூர்யாவுக்கு ஜோடியாக திரிஷா நடித்திருக்கிறார். மேலும், ஆர்.ஜே.பாலாஜி வில்லனாக நடித்திருக்கிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு பல மாதங்களுக்கு முன்பே துவங்கியது. இந்த படத்தை முடித்துவிட்டு வெங்கி அட்லூரி இயக்கத்தில் விஸ்வநாத் & சன்ஸ் என்கிற படத்தில் சூர்யா நடித்து முடித்துவிட்டார். தற்போது ஜித்து மாதவன் இயக்கத்தில் சூர்யா ஒரு புதுப்படத்தில் நடித்துவருகிறார். ஆனால், கருப்பு படத்தில் ரிலீஸ் தேதி இப்போதுவரை அறிவிக்கப்படவில்லை.
முதலில் படத்தின் ஓடிடி விற்பனை ஆகவில்லை என்றார்கள். தயாரிப்பாளர் அதிகவிலை சொன்னதால் ஓடிடி நிறுவனங்கள் கருப்பு படத்தை வாங்க முன்வரவில்லை. அதன்பின் ஒருவழியாக அது பேசி முடிக்கப்பட்டு ஏப்ரல் மாதம் இப்படம் வெளியாகும் என சொல்லப்பட்டது. ஆனால், ஏப்ரல் மாதமும் கருப்பு படம் வெளியாக வாய்ப்பில்லை என்கிறார்கள்.
தேர்தல் வருவதால் மே மாதம் இரண்டாவது வாரத்தில் கருப்பு படத்தை வெளியிட தயாரிப்பாளர் திட்டமிட்டிருப்பதாக தற்போது செய்திகள் வெளியாகியுள்ளது.