தடுத்து நிறுத்தப்பட்ட விஜய்!.. விமான நிலையத்தில் பரபரப்பு..
தவெக தலைவர் விஜய் கடந்த செப்டம்பர் மாதம் மக்கள் சந்திப்பு கூட்டத்திற்காக கரூருக்கு சென்றபோது அவரை பார்ப்பதற்காக 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் அங்கு கூடியிருந்ததாக சொல்லப்பட்டது.. விஜய் பேசிக்கொண்டிருந்தபோது கூட்டத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதன் காரணமாக பலரும் கீழே விழுந்தனர். அதோடு, அவர்களின் மீது பலரும் விழ மூச்சுத்திணறல் ஏற்பட்டு பலரும் மயக்கமடைந்தனர்.
அதில் பெண்களும், குழந்தைகளும் அடக்கம். இந்த விவகாரம் தொடர்பாக தற்போது சிபிஐ விசாரித்து வருகிறது.. ஏற்கனவே ஜனவரி மாதம் 15 மற்றும் 19ம் தேதி ஆகிய இரு தேதிகளிலும் தவெக தலைவர் விஜய் டெல்லிக்கு நேரில் சென்று சிபிஐ விசாரணையில் கலந்து கொண்டார்..
இந்நிலையில்தான் மார்ச் 15ம் தேதியான நாளை டெல்லி சிபிஐ அலுவலகத்தில் விஜய் ஆஜராக வேண்டும் என சம்மன் இதைத்தொடர்ந்து இன்று மதியமே தனி விமானம் மூலம் விஜய் டெல்லி செல்ல முடிவெடுத்தார்.. இதையடுத்து அவர் இன்று மதியம் விமான நிலையம் வந்தார்.
அப்போது, விஜயின் உடைமைகளை மத்திய தொழில் பாதுகாப்பு உடையினர் சோதனை செய்தபோது அவரின் கையில் ஒரு கத்திரிக்கோல் இருந்ததால் விஜய் தடுத்து நிறுத்தப்பட்டார். இதன் காரணமாக 20 நிமிடங்கள் தாமதமாக அவரின் தனி விமானம் புறப்பட்டு சென்றது
. இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது..