1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
  4. america announced ninty crore for mojtaba khamenei

கோமாவில் ஈரானின் உச்ச தலைவர்?!.. துப்பு கொடுத்தால் 92 கோடி!.. டொனாட்ல் டிரம்ப் அறிவிப்பு...

kameni
அணு ஆயுதம் தயாரிப்பது தொடர்பாக நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்த நிலையில் ஈரான் நாட்டின் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் தொடர் தாக்குதலை நடத்தி வருகிறது. தாக்குதல் துவங்கி இரண்டு நாட்களிலேயே உச்ச தலைவர் கமேனி குடும்பத்துடன் தங்கியிருந்த வீட்டின் மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியது. அதில் கமேனி மற்றும் அவரின் குடும்பத்தினரை சேர்ந்த 16 பேர் உயிரிழந்ததாக செய்திகள் வெளியானது. அதன்பின் கம்பெனியின் மகன் மோஜதபா கமேனியை ஈரானின் புதிய உச்சத் தலைவராக அந்நாட்டின் மத குருக்கள் நியமித்தனர்.

ஆனால், கமேனி தாக்கப்பட்ட போது மோஜ்தபா கமேனியும் அந்த தாக்கத்திலிருந்து சிக்கினார் எனவும், அதில் ஒரு காலை இழுந்து தற்போது அவர் கோமாவில் இருக்கிறார் எனவும் லண்டனில் ஒரு பிரபலமான பத்திரிக்கை செய்தி வெளியிட்டிருக்கிறது. அவர் கோமாவில் இருந்தும் அவரையே மதகுருக்கள் ஈரானின் உச்சத் தலைவராக நியமித்திருக்கிறார்கள் என அந்த செய்தியில் கூறப்பட்டிருக்கிறது.

இந்நிலையில் ஈரானின் புதிய உச்ச தலைவர் மோஜ்தபா கமேனி மற்றும் இஸ்லாமிய குடியரசின் பிற உயர்மட்ட அதிகாரிகள் குறித்து துப்பு கொடுத்தால் 92 கோடி வெகுமதி வழங்குவதாக அமெரிக்க வெளியுறவுத் துறை அறிவித்திருக்கிறது..
அடுத்த கட்டுரையில்
சிறுவர்களுடன் இணைந்து ரீல்ஸ் போட்ட முதல்வர் ஸ்டாலின்!.., வைரல் வீடியோ!..