திங்கள், 13 ஏப்ரல் 2026
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : வெள்ளி, 13 மார்ச் 2026 (08:51 IST)

சன் ரைசர்ஸ் அணிக்காக பாகிஸ்தான் வீரரை ஏலம் எடுத்த காவ்யா மாறன்.. வச்சு செய்யும் நெட்டிசன்கள்..!

சன் ரைசர்ஸ் அணிக்காக பாகிஸ்தான் வீரரை ஏலம் எடுத்த காவ்யா மாறன்.. வச்சு செய்யும் நெட்டிசன்கள்..!
த ஹண்ட்ரட் 2026 ஏலத்தில், சன்ரைசர்ஸ் லீட்ஸ் அணி பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் அப்ரார் அகமதுவை சுமார் ரூ.2.34 கோடிக்கு ஒப்பந்தம் செய்துள்ளது. கடந்த 20 ஆண்டுகளில், ஐபிஎல் உரிமையாளர்களை கொண்ட ஒரு நிறுவனம் பாகிஸ்தான் வீரரை ஒப்பந்தம் செய்வது இதுவே முதல்முறை என்பதால் இது வரலாற்று முக்கியத்துவம் பெறுகிறது. 
 
லண்டனில் நடைபெற்ற இந்த ஏலத்தில், காவ்யா மாறன் தலைமையிலான சன்ரைசர்ஸ் நிர்வாகம் ட்ரெண்ட் ராக்கெட்ஸ் அணியுடன் கடுமையாக போட்டியிட்டு இவரை வாங்கியது.
 
ஈசிபி பாகிஸ்தான் வீரர்களுக்கு எதிரான பாகுபாடு காட்டக்கூடாது என எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், இந்த ஒப்பந்தம் ஒரு முக்கியமான மாற்றமாக கருதப்படுகிறது. அப்ரார் அகமது 2024 முதல் டி20 போட்டிகளில் 52 விக்கெட்டுகளை வீழ்த்தி அபாரமான ஃபார்மில் உள்ளார். 
 
இருப்பினும், அப்ரார் அகமதுவின் பழைய சமூக வலைதள பதிவுகள் தொடர்பாக இந்திய ரசிகர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ஹாரி ப்ரூக் தலைமையிலான லீட்ஸ் அணியில் அவர் இணைய உள்ளது விளையாட்டு ராஜதந்திரத்தில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிகழ்வால் காவ்யா மாறனை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.
 
Edited by Siva