தொடர்புடைய செய்திகள்
- அலாரமாக மாறிய Zepto சேவை: ஒரு சுவாரஸ்யமான சம்பவம்!
- நாயை கதற கதற பாலியல் வன்கொடுமை செய்த 40 வயது நபர்.. கொடூர சம்பவம்..!
- நேருக்கு நேர் வந்த இரண்டு விமானங்கள்.. ரெக்கைகள்மோதியதால் பரபரப்பு.. மும்பையில் திகில் சம்பவம்..!
- கேஸ் சிலிண்டர் விலை திடீர் உயர்வு: வணிகர்களுக்கு அதிர்ச்சி, இல்லத்தரசிகளுக்கு நிம்மதி!
- 1 கோடி ரூபாய் மதிப்பிலான 40 டன் டீசல் பறிமுதல்.. நடுக்கடலில் நடத்திய அதிரடி வேட்டை
சிலிண்டர் இல்லாததால் இழுத்து மூடப்பட்ட பேக்கரிகள்.. பிரெட் கிடைப்பதில் சிக்கல்..!
நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாட்டினால், பேக்கரி தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் விரைவில் பிரெட் தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது.
பல லட்சம் ரூபாய் செலவழித்து எல்பிஜி அடுப்புகளுக்கு பேக்கரி உரிமையாளர்கள் மாறி வருகின்றனர். கடந்த இரண்டு நாட்களாக போராடி சிலிண்டர்களை பெற்றதாகவும், தற்போது இருப்பு இல்லாததால் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதாகவும் பேக்கரி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மும்பையில் சுமார் 2,500 முதல் 3,000 பேக்கரிகள் இதே நிலையை சந்தித்து வருவதாகவும், டெல்லி, கொல்கத்தா, சென்னை உள்ளிட்ட பெருநகரங்களிலும் இதே நிலைதான் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்தத் தட்டுப்பாடு நீடித்தால், குறைந்த வருமானம் கொண்ட மக்கள் மற்றும் புலம்பெயர் தொழிலாளர்களின் முக்கிய உணவான பிரெட் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும். எரிவாயு விநியோகத்தைச் சீர்செய்யாவிட்டால் நாட்டில் உணவு கிடைப்பதில் பெரும் பாதிப்பு ஏற்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
Edited by Siva
