வியாழன், 9 ஏப்ரல் 2026
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 13 மார்ச் 2026 (14:17 IST)

விஜய் பற்றிய கேள்விக்கு சைலன்ஸ்!.. ஆனா வந்தது விஜயோட கார்?.. என்னமோ இருக்கு!...

vijay trisha
விஜயும், திரிஷாவும் பல படங்களில் ஒன்றாக நடித்திருக்கிறார்கள். அப்போது இருவருக்கும் இடையே நல்ல கெமிஸ்ட்ரி உருவானதா தெரியவில்லை. இருவரும் நெருக்கமான நண்பர்களாக மாறினார்கள். அவ்வப்போது திரிஷா விஜயுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பகிர்ந்து வந்தார்.

இந்நிலையில்தான், விஜயின் மனைவி சங்கீதா விஜயிடமிருந்து விவகாரத்து கேட்டு விண்ணப்பித்திருக்கிறார். விஜய் ஒரு நடிகையுடன் தொடர்பில் இருப்பதாகவும் தேவைப்பட்டால் நடிகை மீதும் வழக்கு தொடர்வேன் எனவும் எச்சரித்திருந்தார். சங்கீதா சொன்ன நடிகை திரிஷாதான் என பலரும் புரிந்துகொண்டனர்.

இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் விஜய் திரிஷாவுடன் ஒரு திருமண விழாவில் கலந்துகொண்டார். இதையடுத்து விஜயை பலரும் விமர்சிக்க தொடங்கினார்கள். இந்நிலையில்தான், இன்று சென்னை விமான நிலையம் வந்த திரிஷாவிடம் ‘விஜயுடன் நீங்கள் திருமணத்திற்கு சென்றது சர்ச்சையானது பற்றி என்ன சொல்கிறீர்கள்?’ என செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு எந்த பதிலையும் கூறாமல் சென்றுவிட்டார் திரிஷா.

vijay trisha

இந்நிலையில், விமான நிலையத்திற்கு திரிஷா வந்து இறங்கியது விஜயின் BMW கார் என சில ரசிகர்கள் சொல்லி வருகிறார்கள். அதை நிரூபிப்பது போல புகைப்படத்தையும் அவர்கள் பகிர்ந்து வருகிறார்கள்.