அதிமுக கூட்டணிக்கு போலாமா? வேணாமா?!.. கட்சி நிர்வாகிகளுடன் தவெக திடீர் ஆலோசனை..
நடிகராக இருந்த விஜய் அரசியலுக்கு வர விரும்பி தமிழக வெற்றி கழகம் என்கிற அரசியல் கட்சியை துவங்கினார். அதோடு ஜனநாயகன் எனது கடைசி படம் எனவும் அறிவித்தார்.
சொன்னது போலவே அந்த படத்திற்கு பின் விஜய் இதுவரை எந்த படத்திலும் நடிக்கவில்லை. ஒருபக்கம் 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் விஜய் அரசியல் தொடர்பான பணிகளில் ஈடுபட்டிருக்கிறார். இதுவரை 60 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை அவர் தயாரித்துவிட்டதாக சொல்லப்படுகிறது..
ஒருபக்கம் விஜய் இதுவரை எந்த கட்சியுடனும் கூட்டணி அமைக்கவில்லை.. அதேபோல் மற்ற எந்த கட்சியும் தவெகவுடன் கூட்டணி அமைக்க முன்வரவில்லை. கட்சி துவங்கியதில் இருந்தே திமுகவை மட்டும்தான் விஜய் கடுமையாக விமர்சித்து வருகிறார்.. ஆனால் அதே திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்றால் விஜய் அதிமுக - பாஜக கூட்டணியில் இணைய வேண்டும் என அரசியல் விமர்சகர்கள் சொல்லி வருகிறார்கள். விஜய் எப்படியும் கூட்டணிக்கு வந்துவிடுவார் என்கிற நம்பிக்கையில்தான் எடப்பாடி பழனிச்சாமி தொகுதி பங்கீடு குறித்து இதுவரை ஆலோசனை செய்யவில்லை என சொல்லப்படுகிறது..
ஒருபக்கம், பவன் கல்யாண மூலமாகவும் விஜயை தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைக்கும் முயற்சிகள் நடந்ததாக சொல்லப்பட்டது. இந்நிலையில்தான், திடீரென பனையூர் அலுவலகத்தில் கூட்டணிக்கு செல்வது குறித்து தவெகவின் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் காணொலி மூலம் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. மொத்தம் 120 மாவட்ட செயலாளர்கள் இதில் பங்கேற்றுள்ளனர். அதில் 98 பேர் அதிமுக - பாஜக கூட்டணிக்கு செல்லலாம் என கருத்து தெரிவித்ததாக சொல்லப்படுகிறது. அவர்களின் முடிவுக்கு ஏற்றார் போல் விஜய் கூட்டணி பற்றிய முடிவெடுப்பார் என நம்பப்படுகிறது.