1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. tvk leader vijay may check pulic reaction

அதிமுக - பாஜக கூட்டணியில் தவெக!.. நோட்டம் பாக்குறாரா விஜய்?..

vijay eps
விஜய் துவங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகம் முதல் தேர்தலை சந்திக்கவிருக்கிறது. விஜய் அடிப்படையில் ஒரு நடிகர் என்பதாலும், அவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருப்பதாலும் அவர் கணிசமான வாக்குகளை வாங்குவார் என கணிக்கப்படுகிறது. அதேநேரம், வெற்றிக்கு தேவையான கூட்டணியை விஜய் அமைக்கவில்லை.

ஒருபக்கம், அதிமுக - பாஜக கூட்டணியில் தவெக இணையப்போகிறார் என்கிற செய்தி நேற்று காலை முதலே ஓடிக்கொண்டிருக்கிறது. என்.டி.ஏ கூட்டணியில் இணைவது பற்றி தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தவெக மாவட்ட செயலாளர்களுடன் நேற்று ஆலோசனை செய்ததாகவும், அதில் 90 சதவீதம் பேர் திமுகவை தோற்கடிக்க வேண்டுமானால் நாம் அதிமுக கூட்டணியில் இணையவேண்டும். தனித்து நின்றால் வாக்குகள் கிடைக்கும். ஆனால், வெற்றி பெறமாட்டோம். அதிமுக கூட்டணிக்கு போனால் நிறைய தொகுதிகளில் வெற்றிபெறுவதோடு தளபதிக்கு துணை முதல்வர் பதவி கிடைக்கும் என சொன்னதாக செய்திகள் வெளியானது. ஆனால், இதை தவெக நிர்வாகிகள் யாரும் சொல்லவில்லை.

மேலும், விஜய் தரப்பு எடுத்த சர்வேவில் 5 தொகுதிகளில் மட்டுமே நாம் வெற்றி பெறுவோம். தனித்து போட்டியிட்டால் தோல்விதன் மிஞ்சும் என பதில் கிடைத்ததாக சொல்லப்படுகிறது. ஒருபக்கம், என்.டி.ஏ கூட்டணிக்கு நாம் போகிறோம் என்றால் கட்சி நிர்வாகிகள், ரசிகர்கள் மற்றும் பொதுமக்களிடம் என்ன ரியாக்‌ஷன் வருகிறது என பார்க்க கூட விஜய் விரும்பியிருக்கலாம் எனவும் சிலர் சொல்கிறார்கள்.

ஏற்கனவே, விஜயின் மனைவி சங்கீதா விவாகரத்து வழக்கு தொடர்ந்தபோது திரிஷாவை கூட்டிக்கொண்டு ஒரு திருமண விழாவுக்கு போனார். மக்கள் மற்றும் ரசிகர்களின் ரியாக்‌ஷன் என்ன என பார்ப்பதற்காகவே விஜய் அதை செய்தார் எனவும் சிலர் சொன்னார்கள். அதுபோல இப்போது கூட்டணி விஷயத்திலும் விஜய் நோட்டம் பார்க்கிறார் என சிலர் கூறுகிறார்கள்.
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
NDA கூட்டணியில் தவெக!.. விஜய்க்கு சாதகமா? பாதகமா?.. ஒரு அலசல்!..