தக்காளி சீனிவாசன் காலமானார்.. திரையுலகினர் இரங்கல்!..
தமிழ் திரையுலகில் நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர் என வலம் வந்தவர் தக்காளி சீனிவாசன்.. பெரும்பாலும் திகில் மற்றும் கொலை மர்ம கதைகளை தயாரித்திருக்கிறார். இவர்கள் வருங்கால தூண்கள், மனசுக்குள் மத்தாப்பு, நாளைய மனிதன், அதிசய மனிதன் போன்ற படங்களை தயாரித்திருக்கிறார்..
ஜென்ம நட்சத்திரம், விட்னஸ், அசோகவனம், அடுத்தது போன்ற திரைப்படங்களை இயக்கியிருக்கிறார்.. நாளைய மனிதன், வலது காலை வைத்து வா, அதிசய மனிதன், ஜென்ம நட்சத்திரம், ஃபிட்னஸ் உள்ளிட்ட சில படங்களுக்கு இசையமைத்திருக்கிறார்.. சில படங்களில் நடித்தும் இருக்கிறார்..
குறிப்பாக சூரசம்ஹாரம் படத்தில் வில்லனாக நடித்திருந்தார்.. வாழ்க்கையின் கடைசி கால கட்டங்களில் ஒரு ஆசிரமம் நடத்தி அனாதை குழந்தைகளுக்கு தத்தெடுத்து சமூக சேவையில் ஈடுபட்டு வந்தார்.. இந்நிலையில் தற்போது மரணமடைந்திருக்கிறார்.. அவரின் மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்...