வெள்ளி, 31 மார்ச் 2023

தின பலன்கள்

இன்று தாய் மற்றும் தாய் வழி உறவினர்களுடன் இருந்த மனக்கசப்பு நீங்கி உற்சாகம் துளிர்விடும். எவருக்காகவும் பரிந்து பேசுவதோ ஜாமின் கையெழுத்து போடுவதோ கூடவே...Read More
இன்று பணவரவு அதிகரிக்கும். வீண் செலவுகளை செய்யாதீர்கள். ஆடம்பர பொருட்கள் வாங்குவதை சில நாட்கள் தள்ளி போடவும். பொது இடத்தில் மற்றவர்களைப் பற்றி விமர்சனம் செய்யும்...Read More
இன்று நீங்கள் நல்லது சொன்னாலும், செய்தாலும் விமர்சனம் செய்யப்படலாம். கவனம். நீங்கள் யாருக்கெல்லாம் நல்லது செய்தீர்களோ அவர்களில் சிலர் அதையெல்லாம் மறந்து விட்டு சண்டையிடலாம். யாரிடமும்...Read More
இன்று சிலர் உங்களை பணம் கேட்டு தொந்தரவு செய்யலாம். கடன் வாங்குவதையோ மற்றும் கொடுப்பதையோ தவிர்க்கவும். வெளிநாட்டு தொடர்புகள் அதிகரிக்கும். வெளிநாடு மற்றும் வெளியூர் செல்ல...Read More
இன்று வழக்கு வியாஜ்ஜியங்களில் வெற்றி பெற பல பேரிடம் ஆலோசனைகளை கேளுங்கள். அதன்பின் முடிவெடுங்கள். பிள்ளைகள் மற்றும் உடன்பிறந்தோரின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். தன்னம்பிக்கை...Read More
இன்று சிறுசிறு உஷ்ண சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வரலாம். தூக்கத்தைக் கட்டுப்படுத்தாதீர்கள். எந்த பிரச்சனையாக இருந்தாலும் உடனே மருத்துவரை அணுகவும். குடுமப வாழ்வில் பொறுமை தேவை. அதிர்ஷ்ட...Read More
இன்று எடுத்த காரியத்தில் உறுதியாக இருங்கள். வீண் பேச்சு கூடவே கூடாது. வியாபார ரீதியாக போட்டிகள் வரலாம். உத்தியோகத்தில் வேலைபளு அதிகரிக்கும். வம்பு வழக்கு கூடவே...Read More
இன்று பெற்றோரது ஒத்துழைப்பு கிடைக்கும். வெளிவட்டடரத்தில் மதிப்பு, மரியாதை உயரும். எந்த மனிதரையும் விமர்சனம் வெளியில் வைத்து விமர்சனம் செய்ய வேண்டாம். அரசு விஷயாதிகளில் ...Read More
இன்று சொத்து சிக்கல்களில் பெரியோர்களின் ஆலோசனைகளைக் கேளுங்கள். தாய் மற்றும் தாய் வழி உறவினர்களிடம் சிறுசிறு சலசலப்பு ஏற்பட்டு சரியாகும். அலைச்சகள் நிறைந்த பயணங்கள் நிரம்ப...Read More
இன்று சுபகாரியங்களில் கலந்து கொள்வீர்கள். வியாபாரம் மற்றும் உத்தியோகத்தில் சந்தர்பம் அறிந்து செயல்படுங்கள். கொடுக்கலில் வாங்கலில் கவனம் தேவை. கடன் கொடுக்கவும் வாங்கவும் கூடவே...Read More
இன்று சம்பளம் உயரும். இடமாறுதல் கிடைக்கும். அடுத்தவர்கள் விஷயத்தில் மூக்கை நுழைக்காதீர்கள். மணமாகாதவர்களுக்கு மணமாகும். சுபச்செலவுகள் இருக்கும். குழந்ததயில்லாதவர்களுக்கு பாக்கியம் கிட்டும். வீடு, வாகனம்,...Read More
இன்று மேற்படிப்பு விஷயமாக வெளிநாடு செல்வோர் மிகுந்த கவனமாக செயல்படவும். முடிந்தவரை வெளியில் சாப்பிடுவதை தவிர்க்கவும். மாணவமணிகளுக்கு உயர்கல்வி கிடைக்கும். நினைத்த மதிப்பெண்களை கொஞ்சம்...Read More

கச்சத்தீவில் சிவன், முனீஸ்வரன் கோவில் கட்ட வேண்டும் என மதுரையில் அர்ஜுன் சம்பத் பேட்டி | கச்சத்தீவில் சிவன், முனீஸ்வரன் கோவில் கட்ட வேண்டும் என மதுரையில் அர்ஜுன் சம்பத் பேட்டி இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகரிடம் 13 கோரிக்கைகள் அடங்கிய மனு அளித்தார், பின்னர் அர்ஜுன் சம்பத் செய்தியாளர்களிடம் பேசுகையில் "சுதந்திர போராட்ட தியாகி வீரசாவர்க்கரை இழிவாக பேசிய ராகுல்காந்தியை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும், சித்திரை திருவிழாவிற்கு வரும் பக்தர்களுக்காக குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும், இந்துக்களை தொடர்ந்து அவதூறவாக பேசி வரும் திருமாவளவன் மீது நடவடிக்கைகள் எடுக்க வேண்டும், தமிழகத்தில் உள்ள கோவில்களில் திமுகவை சேர்ந்தவர் மட்டுமே அறங்காவலர் பதவியில் நியமிக்கப்பட்டு வருகிறார், ஆன்மீகத்தில் நாட்டம் உள்ளவர்களை அறங்காவலராக நியமிக்க வேண்டும், எப்ரல் 14 ல் பாஜக தலைவர் அண்ணாமலை திமுக ஊழல் பட்டியல் வெளியிடுகிறார், அண்ணாமலை வெளியிடும் ஊழல் பட்டியலில் இடம்பெறும் திமுக அமைச்சர்களை கைது செய்ய வேண்டும், தமிழகத்தில் லஞ்சம், ஊழலை ஒழிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், தென் மாவட்டங்கள் வளர்ச்சி பெற தென் தமிழகத்தை தனி மாநிலமாக உருவாக்க வேண்டும், கச்சத்தீவில் சிவன், முனீஸ்வரன் கோவில் கட்ட வேண்டும், இதற்கு மத்திய, மாநில அரசு வலியுறுத்த உள்ளேன், கச்சத்தீவு முழுக்க முழுக்க கிறிஸ்தவர்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்படுகிறது" என கூறினார்

ராகுல்காந்திக்கு ஆதரவாக ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற ஆதித்தமிழர் கட்சியினர் கைது | மதுரையில் ராகுல்காந்திக்கு ஆதரவாக ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற ஆதித்தமிழர் கட்சியினர் 50 க்கும் மேற்பட்டவர்கள் கைது காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல்காந்தியினை நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து தகுதியிழப்பு செய்யப்பட்டதை கண்டித்தும், இந்திய அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாக்க வலியுறுத்தியும், ஆதித்தமிழர் கட்சியின் தலைவர் கு.ஜக்கையன் தலைமையில் அக்கட்சியினர் 50 க்கும் மேற்பட்டவர்கள் மதுரையில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர், பெரியார் பேருந்து நிலையத்தில் இருந்து ஊர்வலமாக வந்த போராட்டக்காரர்கள் ரயில் நிலைய கிழக்கு நுழைவு வாயில் போராட்டம் நடத்தினர்கள், மேலும் தடுப்புகளை தாண்டி ரயில் நிலையத்திற்கு உள்ளே போராட்டக்காரர்கள் செல்ல முயன்றதால் காவல்துறைக்கும், போராட்டக்காரர்களுக்கும் தள்ளு - முள்ளு ஏற்பட்டது, இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்

மாணவர்களிடம் அதிக கல்வி கட்டணம் வசூலிப்பதாக பெற்றோர்கள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் புகார் மனு | கோவை - 29-03-23 கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் செயல்பட்டு தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளியில் இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் படிக்கும் மாணவர்களிடம் அதிக கல்வி கட்டணம் வசூலிப்பதாக பெற்றோர்கள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளனர். கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஜமீன் ஊத்துக்குளியில் உள்ள நாச்சியார் வித்யாலயம் பள்ளியில் சுமார் 80 குழந்தைகள் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் இலவசமாக படித்து வருவதாக தெரிகிறது. இந்நிலையில் அங்கு படிக்கும் குழந்தைகளுக்கு இதுவரை எல்.கே.ஜி முதல் எட்டாம் வகுப்பு வரை கல்வி கட்டணமாக ரூ.10,500 முதல் ரூ.15,500 வரை கட்டி வந்த நிலையில் அதற்கு எந்தவிதமான ரசீதும் இதுவரை கொடுக்கவில்லை என்றும் தற்போது 2023-24 ஆம் ஆண்டிற்கான கல்வி கட்டணமாக ரூ.25 ஆயிரம் வரை பள்ளி நிர்வாகம் நிர்ணயித்து தொகையை கட்ட நிர்பந்தம் செய்வதாக கூறி பெற்றோர்கள் கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளனர். இது குறித்து மனுதாரர்கள் கூறியதாவது. சீருடை , புத்தகம், பிற கூடுதல் பயிற்சிக்கு ஒரு குறிப்பிட்ட கட்டணம் வசூல் செய்து வந்த நிலையில், தற்போது சிபிஎஸ்சி யாக பள்ளி தரம் உயர்த்தப்படுவதால் இக்கட்டணத்தை செலுத்த பள்ளி நிர்வாகம் கட்டாயபடுத்துவதாகவும் உடனடியாக கட்டணத்தை திரும்ப பெற வேண்டும், அரசு அறிவித்த கட்டாய கல்வி சட்டத்தின் கீழ் இலவச கல்வி வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏழை மக்களின் பசியை போக்கும் விதமாக ஜீவ சாந்தி அறக்கட்டளை சார்பாக துவங்கப்பட்டுள்ள அணையா அடுப்பு | கோவை ஆதரவற்ற ஏழை மக்களின் பசியை போக்கும் விதமாக ஜீவ சாந்தி அறக்கட்டளை சார்பாக துவங்கப்பட்டுள்ள அணையா அடுப்பு எனும் சமுதாய சமையற்கூடத்தில்,ரமலான் மாத காலை உணவான ஸஹர் உணவை விநியோகிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. கோவையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் ஜீவசாந்தி அறக்கட்டளையினர் ஆதரவில்லாமல் உயிரிழந்த உடல்களை அடக்கம் செய்வது,இலவச ஆம்புலன்ஸ் சேவை,என பல்வேறு சமூக சேவை பணிகளை கடந்த பதினைந்து வருடங்களாக செய்து வருகின்றனர். கடந்த வாரம் அணையா அடுப்பு எனும் சமுதாய சமையற்கூடத்தை துவக்கி அதன் வாயிலாக கோவை அரசு மருத்துவமனை,இரயில் நிலையம் போன்ற மக்கள் அதிகம் கூடும் பகுதியில் இலவசமாக மதிய உணவு வழங்கும் திட்டத்தை செயல் படுத்தி வருகின்றனர். இந்நிலையில் இஸ்லாமியர்களின் புனித மாதமான ரம் ஜான் நோன்பு துவங்கியதை தொடர்ந்து இன்னும் கூடுதலாக, இஸ்லாமியர்கள் நோன்பு வைப்பதற்கு முன்னதாக உட்கொள்ளும் ஸஹர் உணவான காலை உணவை வழங்கும் பணியை துவங்கி உள்ளனர். இந்நிலையில் இதற்கான பணிகளை நேரில் பார்வையிட்ட தமிழ்நாடு பல்சமய நல்லுறவு இயக்கத்தின் தலைவர் முகம்மது ரஃபி ஜீவசாந்தி அறக்கட்டளையின் நிறுவனர் சலீம் மற்றும் நிர்வாகிகளை பாராட்டினார்.தொடர்ந்து இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,வெளி மாநிலம்,மற்றும் வெளியூர்களில் இருந்து கோவையில் இஸ்லாமியர்கள் உட்பட பல்வேறு தரப்பினர் வசித்து வருவதாகவும்,இதில் இஸ்லாமியர்களின் புனித மாதமான ரம்ஜான் நோன்பை கருத்தில் கொண்டு அணையா அடுப்பின் வாயிலாக ஸஹர் உணவை அவர்களது இருப்பிடத்திற்கே சென்று வழங்குவது உள்ளபடியே பாராட்டுக்குரியது என புகழாரம் சூட்டினார். கரும்புகடை சேரன் நகர் பகுதியில்,ஆதரவற்ற ஏழை எளிய மக்களின் பசியை போக்கும் விதமாக ஜீவசாந்தி அறக்கட்டளையினர் அணையா அடுப்பு துவங்கியுள்ள நிலையில்,அதே பகுதியில் புற்றுநோய் நல மையத்திற்கான பணிகளும் நடைபெற்று வருவது குறிப்பிடதக்கது.

நீட் தேர்வு மாணவர்களின் விவரங்கள் கசியப்பட்டுள்ளது - அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மனு. | கோவை - 29-03-23 நீட் தேர்வு மாணவர்களின் விவரங்கள் கசியப்பட்டுள்ளது - சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காங்கிரஸ் கட்சியினர் புகார் மனு. மருத்துவ நுழைவு தேர்வான நீட் தேர்விற்கு பல்வேறு மாணவர்கள் மத்திய அரசின் இணையதள பக்கத்தில் அவர்களது விவரங்களை பதிவேற்றம் செய்துள்ள நிலையில் அந்த தகவல்கள் கசியப்பட்டு சில தனியார் பயிற்சி நிறுவனங்கள் சட்டத்திற்கு புறம்பாக பெறப்பட்டுள்ள தகவல்களைக் கொண்டு தனியார் இடைக்கால பயிற்சி நிறுவனங்களும் பெற்றோர்களை வணிகமயமாக்கும் எண்ணத்தோடு கட்டாயப்படுத்துவதாகவும் எனவே மத்திய அரசின் நீட் தேர்வு வலைதளபக்கத்தில் பதிவு செய்யப்பட்ட தகவல்களை சட்டத்திற்கு புறம்பாக கசிய செய்த அதிகாரிகள் மீதும் தனியார் பயிற்சி நிறுவனங்கள் மீதும் நடவடிக்கை எடுக்க கோரி கோவை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் கட்சியின் தேசிய செயலாளர் மயூரா ஜெயக்குமார் தலைமையில் கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மயூரா ஜெயக்குமார் கூறியதாவது. மத்திய அரசினுடைய நீட் தேர்வு துறை இந்த ஆண்டு மிகப்பெரிய சைபர் ஊழலில் ஈடுபட்டுள்ளார்கள் என தெரிவித்தார். சமீப காலத்தில் நீட் தேர்வு எழுதும் மாணவர்கள் மத்திய அரசின் வலைத்தளத்தில் அவர்களுடைய தகவலை பதிவேற்றிய நிலையில் அந்த தனிப்பட்ட தகவல்களை நீட் தேர்வு துறை தனியார் பயிற்சி நிறுவனங்களுக்கு விட்டுள்ளதாகவும் மேலும் இது சட்டப்படி குற்றமாகும் எனவும் கூறினார். தற்போது இந்த தகவல்கள் கசியப்பட்டு தனியார் பயிற்சி நிறுவனங்கள் மாணவர்களின் பெற்றோர்களை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு கட்டாயப்படுத்தி அவர்களை மூளைச்சலவை செய்து தங்களுடைய நிறுவனங்களில் குழந்தைகளை படிக்க வைத்தால் தான் நீட் தேர்வில் தேர்ச்சி பெற முடியும் என கூறி பணக் கொள்ளையில் ஈடுபட்டுள்ளதாக குற்றம் சாட்டினார். எனவே மத்திய அரசின் நீட் தேர்வு துறை அதிகாரிகள் மீதும் தனியார் பயிற்சி மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார். | கோவை பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் ராமதாஸ் தமிழில் பெயர் பலகை இல்லாத கடைகளில் மையிட்டு அழிப்போம் என்ற நிலைபாட்டை தவிர்க்க வேண்டும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார். மே 5 ஆம் தேதி வணிகர் தின மாநில மாநாடு ஈரோட்டில் நடைபெறுகிறது. இது குறித்த கோவை மண்டல சிறப்பு ஆலோசனைக் கூட்டம் கோவை சாய்பாபா காலனி உள்ள தனியார் அரங்கில் நடைபெற்றது. இதை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா கூறியதாவது.வணிகர் உரிமை மாநாட்டில் லட்சக்கணக்கான வணிகர்கள் பங்கேற்க உள்ளதாக தெரிவித்தார். அனைத்து மாநில தலைவர்கள், மாநில அமைச்சர்கள் இம்மாநாட்டில் பங்கேற்க உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.மேலும் 5 ஆண்டு என்பதை ஓராண்டாக உணவு தர நிர்ணயம் சட்டத்தை திரும்பப்பெற வேண்டும் என்றும், ஜி.எஸ்.டி.யை எளிமையாக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்படும் என்றும் ஏப்ரல் 18"ஆம் தேதி டெல்லியில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், பியூஷ் கோயல் ஆகியோரை சந்தித்து கோரிக்கை மனு அளிக்க உள்ளதாகவும் அவர்‌ குறிப்பிட்டார்.மேலும் எம்.ஆர்.பி., கொண்டு வணிகர்களை வஞ்சிக்கும் கார்ப்பிரேட்டிற்கு அரசு துணை போவதாக தோன்றுகிறது எனவும் குற்றம்சாட்டினார். ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும் என்றும், ஆன்லைன் வர்த்தகத்தை வரைமுறைப்படுத்த வேண்டும் என்றும் விக்கிரமராஜா கூறினார். மேலும் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் ராமதாஸ் தமிழில் பெயர் பலகை இல்லாத கடைகளில் மையிட்டு அழிப்போம் என்ற நிலைபாட்டை தவிர்க்க வேண்டும் எனவும்‌, இவ்விவகாரத்திற்கு ஒரு மாத அவகாசம் என்பது போதாது என கூறிய அவர்‌, எங்கள் அமைப்பு சார்பில் அனைத்து வணிகர்களுக்கு தமிழ் மொழியில் பெயர் பலகை வைக்கக்கோரி சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

4200கிலோ மீட்டர் சைக்கிள் பயணம்-பசுமை இந்தியா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய இளைஞர். | கோவை காஸ்மீர் முதல் கன்னியாகுமரி வரை சைக்கிள் பயணம்- 4200கிலோ மீட்டர் பசுமை இந்தியா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய இளைஞர். கோவையை சேர்ந்த இளைஞர் சிவசூரியன் செந்தில்ராமன் இவர் தனது சிறுவயதில் இருந்து சைக்கிள் பயணம் மீது சமூகத்தின் மீது மிகவும் அக்கறை கொண்டவர். அதே போல சைக்கிளில் பயணம் செய்து மக்களுக்கு பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறார். இந்நிலையில் பசுமை இந்தியா மற்றும் புவி வெப்பமயமாதல் குறித்து பள்ளி கல்லூரி மானவர்களைடையே பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தனிமனித சைக்கிள் பயணத்தை மேற்கொண்டுள்ளார்.கடந்த 3ஆம் தேதி காஸ்மீரில் துவக்கிய இந்த விழிப்புணர்வு பயணத்தை கன்னியாகுமரி வரை சென்று முடிவு செய்கிறார். இந்நிலையில் கோவை வந்த அவருக்கு கோவை அரசு கலை கல்லூரி மாணவர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.காஸ்மீர் முதல் கன்னியாகுமரி வரை என 4200 கிலோ மீட்டர் சைக்கிள் பயணம் மேற்கொண்டு விழிப்புணர்வு சாதனையை நிகழ்த்தும் சிவசூரியனுக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

வழக்கறிஞர்களுக்கு பாதுகாப்புச் சட்டத்தை அரசு நிறைவேற்ற வேண்டும் - பாஜக வழக்கறிஞர் அணி ஆர்ப்பாட்டம் | சென்னை பெருங்குடி பகுதியைச் சேர்ந்தவர் ஜெய்கணேஷ் (வயது 33).இவர் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்றைய தினம் மர்ம நபர்களால் கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.இதனை கண்டித்து தமிழக முழுவதும் உள்ள வழக்கறிஞர்கள் கண்டனத்தை பதிவிட்டு வருகின்றனர்.இதன் ஒரு பகுதியாக பாரதிய ஜனதா கட்சியின் வழக்கறிஞர்கள் பிரிவு அணியின் மதுரை மாவட்ட தலைவர் ஐயப்ப ராஜா தலைமையில் வழக்கறிஞர்கள் மதுரை மாவட்ட நீதிமன்ற வளாகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் குறிப்பாக, வழக்கறிஞர்களை தொடர்ந்து தாக்கி வரும் நபர்களை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும், கடந்த ஓர் ஆண்டுகளாக வழக்கறிஞர்கள் மீது தாக்குதல் நடத்தி வரும் குண்டர்களை அடையாளம் கண்டு அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்,மேலும் வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்டத்தை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பாரதிய ஜனதா கட்சியின் வழக்கறிஞர்கள் பிரிவு அணியினர் மதுரை மாவட்ட நீதிமன்றம் வாயில் முன்பு கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் உட்பட 50க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அதிமுகவின் பொதுச் செயலாளர் ஆனார் எடப்பாடி பழனிசாமி - தொண்டர்கள் கொண்டாட்டம் | அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதிமுக பொதுக்குழு தீர்மானத்துக்கும், பொதுச்செயலாளர் தேர்தலுக்கும் தடை விதிக்க மறுப்பு தெரிவித்து வழக்குகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதன்மூலம் பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் என்றும் பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை இல்லை என்றும் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனால் எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. பொதுச்செயலாளராக தேர்வானார்.. பொதுச்செயலாளர் தேர்தலில் எடப்பாடி பழனிசாமி மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்துள்ளதால் அவர் போட்டியின்றி தேர்வானார். இதையடுத்து, அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் மூத்த நிர்வாகிகள் முன்னிலையில் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்றார். பொதுச்செயலாளர் சான்றிதழை தேர்தல் ஆணையர்கள் நத்தம் விஸ்வநாதன், பொள்ளாச்சி ஜெயராமன் எடப்பாடி பழனிசாமியிடம் வழங்கினர். அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர். இதன் ஒரு பகுதியாக மதுரை மாநகர் அதிமுக சார்பாக கோரிப்பாளையம் பகுதியில் உள்ள அதிமுக கட்சி அலுவலகத்தில் அதிமுகவினர் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி உற்சாகமாக கொண்டாடினார்கள். இந்த நிகழ்வில் அதிமுகவின் மதுரை மாவட்ட பொருளாளர் ராஜா மற்றும் எம் எஸ் பாண்டியன் அதிமுகவினர் பலரும் கலந்து கொண்டு எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக வாழ்த்துக்களை தெரிவித்து கோசமிட்டு பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி உற்சாகமாக கொண்டாடினார்கள்.

வெப் ஸ்டோரி

மேலும் காண்க

உள்ளாட்சி தேர்தலில் பாஜக தனித்து போட்டியிடுவது யாருக்கு லாபம்?