14 - 16 சதவீதம் பேர் மது அருந்துகிறார்கள்!.. இதனால் வரும் நோய்கள் என்னென்ன?!...
கடந்த பல வருடங்களாகவே மது அருந்துபவர்கள் மற்றும் புகை பிடிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. மது, சிகரெட் இரண்டுமே உடல்நிலையை கடுமையாக பாதிக்கும் என்பது தெரிந்தும் இந்த இரண்டு பழக்கங்களும் பலரிடமும் இருக்கிறது. மது கல்லீரல், கிட்னி ஆகியவற்றை பாதிக்கிறது. சிகரெட் பிடிப்பதால் நுரையீரல் பாதிக்கும்.
ஆனாலும், பலரும் இந்த இரண்டு பழக்கங்களுக்கும் அடிமையாக இருக்கிறார்கள். ஒருபக்கம் இந்தியாவில் சிகரெட், மது அருந்துபவர்களின் எண்னிக்கை கணிசமாக அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதில், அதிர்ச்சி கொடுக்கும்விதமாக சென்னை, மும்பை, பெங்களூர், டெல்லி போன்ற முக்கிய நகரங்களில் பெண்களும் மது அருந்துகிறார்கள். இது தொடர்பான வீடியோக்கள் சமூகவலைத்தளங்களிலும் வெளியாகி வருகிறது.
இந்நிலையில் 26 கோடி இந்தியர்கள் புகையிலை பயன்படுத்துவதாகவும் 14 முதல் 16 சதவீதம் பேர் மது அருந்துவதாகவும் புள்ளி விவரம் சொல்கிறது. மேலும், மது, புகை பழக்கத்தால் புற்றுநோய், இதய நோய் உள்ளிட்ட பாதிப்புகளால் வருடத்திற்க்கு 13 லட்சம் பேர் உயிரிழப்பதாகவும் அந்த புள்ளிவிவரம் சொல்கிறது