அதிக நேரம் மொபைல் பார்ப்பது அடிக்சன் இல்ல!.. இன்ஸ்டாகிராம் CEO நீதிமன்றத்தில் வாதம்!..
கடந்த சில வருடங்களாகவே செல்போன் பயன்பாடு என்பது மக்களிடம் அதிகரித்து விட்டது. குறிப்பாக எல்லோரின் கையிலும் இன்டர்நெட் வசதியுடன் கூடிய ஸ்மார்ட்போன்கள் வந்துவிட்டது. நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர்கள் கூட குறைந்தபட்சம் பத்தாயிரம் முதல் அதிகபட்சம் 25 ஆயிரம் விலைமதிப்புள்ள செல்போன்களை வைத்திருக்கிறார்கள்..
அதேபோல் எப்போது ஸ்மார்ட்போன் வந்ததோ அப்போதே Youtube, Whatsapp, Facebook, Instagram போன்ற சமூகவலைத்தளங்களையும் பலரும் பயன்படுத்த தொடங்கிவிட்டனர். இந்த நான்கையும் பயன்படுத்தாமல் தினசரி வாழ்க்கையை ஒருவருக்கு கடந்து போவதில்லை என்கிற நிலை தற்போது உருவாகியிருக்கிறது.
அதிலும் பலரும் ஒரு நாளைக்கு பல மணி நேரங்களை youtube, facebook, instagram போன்ற சமூக வலைதளங்களில் செலவழிக்கிறார்கள். குறிப்பாக குறுகிய நேரம் வரும் ரீல்ஸ் வீடியோக்களை பார்ப்பதில் பலரும் அதிக நேரம் செலவு செய்கிறார்கள். இப்படி நேரம் செலவழிப்பதை அடிக்சன் (அடிமை ஆவது) என பலரும் சொல்கிறார்கள்..
இந்நிலையில், இது தொடர்பான வழக்கு அமெரிக்க நீதிமன்றத்தில் தொடரப்பட்டது.. அந்த வழக்கில் கலந்து கொண்டு வாதிட்ட இன்ஸ்டாகிராம் CERO ஆதாம் மொசேரி சமூக ஊடகங்களை தினமும் 16 மணி நேரம் பார்ப்பது என்பது ஒரு வகை ஈர்ப்பு மட்டுமே. அது மருத்துவர் ரீதியான அடிமைத்தனம் அல்ல.. ஒருவர் Netflix தொடரை ஒரே இரவில் தொடர்ந்து பார்த்துவிட்டு நான் இதற்கு அடிமை என்று சாதாரணமாக கூறுவது போலத்தான் இதுவும்
என அவர் கூறியிருக்கிறார்..