2012 உலகம் ஒரு பார்வை!
ஜனவரி:
ஈராக்: தீவிரவாதத்திற்கு எதிரான போரில் 1.60 லட்சம் பேர் பலி
ஈராக்கில் கடந்த 9 ஆண்டுகளில் நடந்த தீவிரவாதத்திற்கு எதிரான போரில், சுமார் 1.60 லட்சம் மக்கள் பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரான் மீது ஐரோப்பிய யூனியன் தடை!
ஈரானின் அணு ஆயுத திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஈரான் மீது ஐரோப்பியன் யூனியன் எண்ணெய் தடை விதித்துள்ளது
பிப்ரவரி:
அணு ஆயதங்களை தயாரிக்கிறோம் - ஈரான்!
அணு ஆயுதங்களை தயாரிப்பதற்கு ஈரான் முயல்வதாக அமெரிக்கா தொடர்ந்து குற்றம் சாட்டி வந்த நிலையில், அணு ஆயுதங்களை உற்பத்தி செய்வதற்கான திறனை தான் பெற்றுவிட்டதை உலக நாடுகளுக்கு வெளிப்படையாக ஈரான் அறிவித்துள்ளது.
மார்ச்:
உலகின் பழமையான அணுமின் நிலையம் மூடல்
லண்டன்: உலகின் மிகப்பழமையான அணுமின் நிலையங்களில் ஒன்றாக கருதப்படும் இங்கிலாந்து நாட்டில் உள்ள அணுமின் நிலையம் புதன்கிழமை மூடப்பட்டது.
ரஷ்ய அதிபரானார் விளாடிமிர் புடின்
ரஷ்ய அதிபர் தேர்தலில் விளாடிமிர் புடின் வெற்றி பெற்றுமீண்டும் அதிபராக பெறுப்பேற்க உள்ளார்.
பிரபாகரன் மகனை கொன்ற இலங்கை ராணுவம் - கொடூர காட்சிகளை வெளியிட்டது சேனல் 4
விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் பிரபாகரனின் இளைய மகன் கொடூரமாக கொல்லப்பட்ட காட்சிகளுடன் இலங்கை ராணுவத்தின் போர்க்குற்றம் தொடர்பான 2-வது ஆவணப்படத்தை வெளியிட்டுள்ளது சேனல் 4 தொலைக்காட்சி.
ஏப்ரல்
வீழ்ந்தார் சர்கோஸி; பிரான்ஸ் அதிபரானார் ஹாலண்டே
பிரான்ஸ் அதிபர் தேர்தலில் நிக்கோலஸ் சர்கோஸி தோல்வியடைந்தார். வெற்றி பெற்ற சோஷலிச கட்சி வேட்பாளர் பிராங்காய்ஸ் ஹாலண்டே புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்படுகிறார். அவருக்கு உலக தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
மே!
இங்கிலாந்தில் இருந்து அசாஞ்சே வெளியேற்றம்!
விக்கிலீக்ஸ் நிறுவனர் அசாஞ்சேவை நாடு கடத்த இங்கிலாந்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஜூன்!
எகிப்து அதிபரனார் முகம்மது முர்ஸி!
எகிப்து அதிபர் தேர்தலில் முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் அரசியல் பிரிவான சுதந்திரம் மற்றும் நீதிக்கட்சியின் வேட்பாளர் முகம்மது முர்ஸி வெற்றி பெற்றுள்ளார். அவருக்கு அமெரிக்க அதிபர் ஒபாமா வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஆகஸ்ட்!
அசாஞ்சேவுக்கு ஈக்வடார் அடைக்கலம்!
விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சேவை லண்டனில் இருந்து பாதுகாப்பாக ஈக்வடார் செல்ல அனுமதிக்க போவதில்லை பிரிட்டன் வெளியுறவுத்துறை செயலாளர் வில்லியம் ஹாக் கூறியுள்ளார்.
உலக அழகியானார் 23 வயது சீன மாணவி!
2012ஆம் ஆண்டிற்கான உலக அழகி பட்டத்தை சீனாவைச் சேர்ந்த யூ வெங்ஷியா என்ற 23 வயது மாணவி தட்டிச் சென்றார். 7வது இடத்தைதான் இந்திய அழகி வான்ய மிஷ்ராவால் பிடிக்க முடிந்தது.
நீல் ஆம்ஸ்ட்ராங் மரணம்!
வாஷிங்டன்: நிலவில் முதன் முதலில் காலடி எடுத்து வைத்தவர் என்ற பெருமை கொண்டிருந்த அமெரிக்க விஞ்ஞானி நீல் ஆம்ஸ்ட்ராங் தனது 82-வது வயதில் காலமானார்.
செப்டம்பர்!
சிரியாவிலிருந்து 1,00,000 அகதிகள் பிற நாடுகளில் தஞ்சம்!
சிரியாவில் அதிபர் ஆசாத் படைக்கும் போராட்டக் காரர்களுக்கும் நடந்து வரும் போரில் 100000அகதிகள் வேறு நாடுகளில் தஞ்சம் அடைந்துள்ளதாக ஐ.நா தெரிவித்துள்ளது.
அமெரிக்காவுக்கு எதிராக உலகம் முழுவதும் இஸ்லாமியர்கள் போராட்டம்!
நபிகள் நாயகத்தை இழிவுப்படுத்தும் விதமாக வெளிவந்துள்ள திரைப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்காவுக்கு எதிராக உலகம் முழுவதும் இஸ்லாமியர்கள் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
நபிகள் நாயகத்தை விமர்சிக்கும் சர்ச்சைக்குரிய திரைப்படத்தின் தயாரிப்பாளர் கைது!
நபிகள் நாயகத்தை விமர்சிக்கும் படத்தை தயாரித்த நகோலா பேஸ்லி அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
அக்டோபர்!
பாகிஸ்தானில் பெண்கள் கல்வி போராளி மலாலா மீது துப்பாக்கிச் சூடு!
தலிபான் அச்சுறுத்தல்களையும் மீறி பெண் கல்விக்கு ஆதரவாளித்து வரும் 14 வயது சிறுமியான மலாளா யூசப்ஸாய் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்துக்கு அமைதிக்கான நோபல் பரிசு
2012ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு ஐரோப்பிய ஒன்றியத்துக்கு வழங்கப்படுகிறது. மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸிற்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படும் என்று பலராலும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
டென்வரில் ஒபாமா அலுவலகத்தில் துப்பாக்கிச் சூடு
ஒபாமாவுக்காக டென்வர் நகரில் தேர்தல் அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அலுவலகத்தை நோக்கி மர்ம மனிதன் ஒருவன் துப்பாக்கியால் சுட்டான். இதில் அலுவலக ஜன்னல் கண்ணாடி உடைந்து விழுந்தது.
மூழ்கியது நியூயார்க்; சாண்டிக்கு 12 பேர் பலி
அட்லாண்டிக் கடலோர பகுதிகளில் மையம் கொண்ட சாண்டி புயல் நியூயார்க் மற்றும் நியூஜெர்சியை வரலாறு காணாத அளவிற்கு பாதித்துள்ளது. இது வரை 12 பேர் உயிரிழந்தனர்.
நவம்பர்:
மீண்டும் யு.எஸ். அதிபரானார் ஒபாமா
மீண்டும் அமெரிக்க அதிபராக ஒபாமா மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட ரோம்னிக் தோல்வியை தழுவினார்.
சீன அதிபரானார் ஸி ஜின் பிங்க்
தற்போதைய அதிபரும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவருமான ஹூ ஜிண்டாவோ தனது தலைமை பொறுப்பிலிருந்து விலகுகியதை அடுத்து, புதிய அதிபராக ஸி ஜின் பிங்க் பதவியேற்க உள்ளார்.
இந்திய டாக்டர் மரணம்- அயர்லாந்து அதிபர் தலையீடு
இந்தியாவை சேர்ந்த பெண் டாக்டர் சவிதாவின் மரணம் தொடர்பாக முழுமையான விசாரணை நடத்த அயர்லாந்து அதிபர் உத்தரவிட்டுள்ளார்.
ஐ.நாவில் தனி நாடு அங்கீகாரம் பெற்றது பாலஸ்தீனம்
ஐக்கிய நாடுகள் சபையில் வாக்கெடுப்பில் வெற்றி பெற்ற பாலஸ்தீனம் தனி நாடு அங்கீகாரம் பெற்றுள்ளது.
நபிகளை இழிவுப்படுத்த படம் எடுத்த 7 பேருக்கு தூக்கு
'இன்னோசன்ஸ் ஆப் முஸ்லீம்ஸ்' என முஹம்மது நபியை இழிவுப்படுத்தும் படத்தை எடுத்து பரபரப்பை ஏற்படுத்திய ஏழு பேருக்கும் தூக்கு தண்டனை என்று எகிப்து நீதிமன்றம் அறிவித்துள்ளது.
டிசம்பர்:
பூமிக்கு அடியில் அமெரிக்கா அணுகுண்டு சோதனை
அமெரிக்காவின் தென்மேற்கு பகுதியில் உள்ள நிவேடாவில், போல்லக்ஸ் அணுக்குண்டு சோதனை கடந்த புதன் கிழமை அன்று நடத்தப்பட்டுள்ளது. அமெரிக்காவில் ஒபாமா ஆட்சியின் கீழ் இது நான்காவது அணுக்குண்டு சோதனை ஆகும்.
பிலிப்பைன்ஸில் உணவு பஞ்சம்; 600 பேர் பலி, 1000 பேர் மாயம்
பிலிப்பைன்ஸ் மின்டானவ் தீவை போபா புயல் தாக்கியதில் இதுவரை 600 பேர் பலியாகியுள்ளனர். 1000 ௦௦௦பேர் மாயமாகியுள்ளனர். தற்போது உணவு பற்றாக்குறையால் மக்கள் பசியால் தவித்து வருகின்றனர்.
சிரியாவில் பதற்றம் - முக்கிய நகரங்கள் முற்றுகை
சிரிய போராளிகள் அந்நாட்டிற்கு எதிரான தங்களது தாக்குதலை தலைநகர் டமாஸ்கஸ் மற்றும் அலெப்போ நகரின் மீது அதிகரித்துள்ளார்கள்.
இந்திய நர்ஸ் தூக்கு போட்டு இறந்தார், பிரேத பரிசோதனையில் அதிர்ச்சி
இங்கிலாந்து இளவரசிக்கு உதவி புரிந்த இந்திய நர்ஸ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என்பது பிரேத பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் அவர் சாவதற்கு முன்பு எழுதிய மூன்று கடிதங்கள் சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பிலிப்பைன்ஸ் புயல், மழை பலி 1000-ஐ தாண்டியது
பிலிப்பைன்ஸில் கடந்த 4 ஆம் தேதி வீசிய போபா சூறாவளி காற்றும் அதனைத் தொடர்ந்து புயல் மழையாலும் பலியானோர் எண்ணிக்கை 1000-ஐ தாண்டியதாக அரசு செய்தி குறிப்பு தெரிவித்துள்ளது.
நாளை உலகம் அழியாது ; விண்வெளி ஆய்வாளர்கள் உறுதி
மாயன் இனத்தினர் தயாரித்த காலண்டர் முடியும் நாளான 21ம் தேதி உலகம் 100 சதவீதம் அழியாது என்று அமெரிக்க விண்வெளி ஆய்வு மையம் ஆராய்ந்த அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
2012 ஆம் ஆண்டின் பிரபஞ்ச அழகி - வாய்ப்பை தவறவிட்ட இந்திய அழகி
2012 ஆண்டின் பிரபஞ்ச அழகியை (மிஸ் யூனிவர்ஸ்) தேர்வு செய்யும் போட்டி அமெரிக்காவில் உள்ள லாஸ் வேகாஸ் நகரில் நடந்தது. இந்த போட்டியில் 89 நாடுகளைச் சேர்ந்த அழகிகள் கலந்து கொண்டனர்