பூமிக்கு அடியில் அமெரிக்கா அணுகுண்டு சோதனை
அமெரிக்காவின் தென்மேற்கு பகுதியில் உள்ள நிவேடாவில், போல்லக்ஸ் அணுக்குண்டு சோதனை கடந்த புதன் கிழமை அன்று நடத்தப்பட்டுள்ளது. அமெரிக்காவில் ஒபாமா ஆட்சியின் கீழ் இது நான்காவது அணுக்குண்டு சோதனை ஆகும்.
இதுதொடர்பாக அமெரிக்க தேசிய அணு பாதுகாப்பு நிர்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், போல்லக்ஸ் அணுகுண்டு சோதனை பூமிக்கு அடியில் நடத்தப்பட்டிருக்கிறது. இது அமெரிக்காவின் நடந்த 27-வது சோதனை ஆகும். அணு ஆயுதங்கள் பாதுகாப்பு, ஆற்றல் பராமரிப்பு பற்றிய தகவல்கள் இந்த பரிசோதனை மூலம் தெரிய வரும் என கூறப்பட்டுள்ளது.
இந்த அணுஆயுத சோதனைக்கு வலுவான எதிர்ப்பு தெரிவித்து ஜப்பான் அரசின் சார்பாக ஹிரோஷிமா மேயர் கசுமி மட்சுய் மற்றும் நாகாசாகியின் மேயர் டோஷிமா டோவும் கடிதம் ஒன்றை வாஷிங்டன் வெள்ளை மாளிகைக்கு அனுப்பியுள்ளனர்.