1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. உலகச் செய்திகள்

டென்வரில் ஒபாமா அலுவலகத்தில் துப்பாக்கிச் சூடு

ஒபாமா
ஒபாமாவுக்காக டென்வர் நகரில் தேர்தல் அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அலுவலகத்தை நோக்கி மர்ம மனிதன் ஒருவன் துப்பாக்கியால் சுட்டான். இதில் அலுவலக ஜன்னல் கண்ணாடி உடைந்து விழுந்தது.

அலுவலகத்தில் பலர் பணியாற்றிக் கொண்டிருந்தாலும் அதிர்ஷ்டவசமாக யாரும் காயமடையவில்லை.

ஒரேயொரு குண்டு மட்டும் பாய்ந்ததாகக் கூறப்படுகிறது. மர்ம நபர் யார் எதற்காக இந்த துப்பாக்கிச் சூடு என்பதை வீடியோ ஆதாரங்களுடன் அமெரிக்க போலீஸ் ஆய்வு செய்து வருகின்றனர்.

இந்தத் துப்பாக்கிச் சூடு நடக்கும்போது அதிபர் ஒபாமா வாஷிங்டனில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சம்பவம் அமெரிக்காவில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதிபர் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுபவர்களுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. துப்பாக்கி சூடு தொடர்பாக ஒபாமா அலுவலகத்தில் இருந்து இதுவரை கருத்து எதுவும் வெளியிடப்பட வில்லை.