1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. உலகச் செய்திகள்

உலகின் பழமையான அணுமின் நிலையம் மூடல்

லண்டன்
லண்டன்: உலகின் மிகப்பழமையான அணுமின் நிலையங்களில் ஒன்றாக கருதப்படும் இங்கிலாந்து நாட்டில் உள்ள அணுமின் நிலையம் புதன்கிழமை மூடப்பட்டது.

இருப்பினும அதன் அருகாமையிலேயே புதிய அணுமின் நிலையத்திற்கான கட்டுமானப்பணி துவங்கியுள்ளது. அவை வரும் 2025-ல் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இங்கிலாந்து நாட்டில் கடந்த 1958-ம் ஆண்டில் அணுமின் நிலையத்திற்கான கட்டுமானப்பணி துவங்கியது. 1960-ம் ஆண்டு முதல் அவை தனது பணியை துவக்கியது.

உலகில் அமைக்கப்பட்ட பழமையான அணுமின்நிலையங்களில் இதுவும் ஒன்றாகும். கடந்த 44 ஆண்டுகளாக இயங்கி வந்த இந்த அணுமின் நிலையம் தற்போது மூடப்பட்டது.

இருப்பினும் இந்த அணுமின்நிலையத்தின் அருகிலேயே அதி நவீன வசதியுடன கூடிய அணுமின் நிலையம் வரும் 2025-ம் ஆண்டில் செயல்பாட்டிற்கு வர உள்ளது.