அசாஞ்சேவுக்கு ஈக்வடார் அடைக்கலம் - எதிர்க்கும் பிரிட்டன், ஸ்வீடன்
விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சேவை லண்டனில் இருந்து பாதுகாப்பாக ஈக்வடார் செல்ல அனுமதிக்க போவதில்லை பிரிட்டன் வெளியுறவுத்துறை செயலாளர் வில்லியம் ஹாக் கூறியுள்ளார்.
அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் ரகசிய அறிக்கைகளை தனது இணையதளத்தில் வெளியிட்டதன் மூலம் விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்ச் பிரபலமானார். இதனால் பல்வேறு நாடுகளின் அதிருப்திக்கும் ஆளானார். அவர் மீது இரு பெண்கள் சுமத்திய பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக ஸ்வீடனுக்கு நாடு கடத்த பிரிட்டன் முடிவு செய்தது.
லண்டனில் உள்ள ஈக்வடார் தூதரகத்தில் தஞ்சமடைந்திருக்கும் அசாஞ்சைவை பிரிட்டன் போலீசார் எந்நேரமும் கைது செய்யப்படலாம் எனக் கூறப்பட்ட நிலையில், அவருக்கு அரசியல் தஞ்சம் அளிக்கப் போவதாக தென் அமெரிக்க நாடான ஈக்வடார் நேற்று அறிவித்தது.
இந்த நிலையில் அசாஞ்சேவுக்கு அரசியல் தஞ்சம் அளிக்க முன்வந்துள்ள ஈக்வடாரின் முடிவுக்கு, பிரிட்டனும், ஸ்வீடனும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
அசாஞ்சேவை லண்டனில் இருந்து பாதுகாப்பாக ஈக்வடார் செல்ல அனுமதிக்க போவதில்லை பிரிட்டன் வெளியுறவுத்துறை செயலாளர் வில்லியம் ஹாக் கூறியுள்ளார்.
இந்த விவகாரத்தில் பிரிட்டனுக்கும், தங்கள் நாட்டுக்கும் ஒத்துழைக்குமாறு ஈக்வடார் அரசை ஸ்வீடன் வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் ஆண்டெர்ஸ் ஜோர்லே கேட்டுக்கொண்டுள்ளார்.