பிலிப்பைன்ஸ் புயல், மழை பலி 1000-ஐ தாண்டியது
FILE
பிலிப்பைன்சில் கடந்த 4 ஆம் தேதி போபா சூறாவளி புயல் காற்று வீசியது. இதனைத் தொடர்ந்து கடும் புயல் மழையும் பிலிப்பைன்ஸைத் தாக்கியது. இதில் பிலிப்பைன்ஸ் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. அரசு பேரிடர் அமைப்பு இப்புயலால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து நேற்று செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளது.
அதில், இப்புயலில் 1020 பேர் பலியாகியுள்ளனர் என்றும் 844 பேரைக் காணவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காணாமல் போனவர்களில் நூற்றுகணக்கானோர் மீனவர்கள் மற்றும் கிராமத்தினர்கள் ஆவர் என்றும் மீட்பு பணி தொடர்ந்து நடந்து வருவதாகவும் அச்செய்தி குறிப்பு தெரிவித்துள்ளது.
