2012 ஆம் ஆண்டின் பிரபஞ்ச அழகி - வாய்ப்பை தவறவிட்ட இந்திய அழகி
FILE
2012ம் ஆண்டின் பிரபஞ்ச அழகியாக அமெரிக்க அழகி ஒலிவியா கல்போ முடிசூட்டப்பட்டார்.அவருக்கு கடந்தாண்டு மிஸ் யுனவர்சாக தேர்ந்தெடுக்கப்பட்ட லைலா லோபஸ் கிரீடம் சூட்டினார். இரண்டாவது இடத்தை பிலிப்பைன்ஸ் நாட்டின் ஜெனைன் டகோனன் வென்றார். மூன்றாவது இடம் வெனிசுலா நாட்டின் ஐரின் எசருக்கு கிடைத்தது.
கடந்த 2 மாத காலமாக நடைபெற்ற பல்வேறு சுற்று போட்டிகளின் முடிவில் இறுதி சுற்றுக்கு 16 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.அதில் இந்தியாவின் சார்பில் பங்கேற்ற ஷில்பா சிங்கும் ஒருவர். இதனால் 12 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அழகி ஒருவருக்கு பிரபஞ்ச அழகி பட்டம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால்,இந்தியாவின் சார்பில் போட்டியிட்ட ஷில்பா சிங் முதல் 10 இடங்களில் கூட இடம்பெறவில்லை.
