அமெரிக்காவுக்கு எதிராக உலகம் முழுவதும் இஸ்லாமியர்கள் போராட்டம்
நபிகள் நாயகத்தை இழிவுப்படுத்தும் விதமாக வெளிவந்துள்ள திரைப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்காவுக்கு எதிராக உலகம் முழுவதும் இஸ்லாமியர்கள் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
அமெரிக்காவில் வாழும் எகிப்தை சேர்ந்த கிறிஸ்தவர் ஒருவர் தயாரித்த சர்ச்சைக்குரிய 'தீ இன்னசன்ஸ் ஆப் முஸ்லிம்ஸ்' படத்தை எதிர்த்து பல நாடுகளில் இஸ்லாமியர்கள் போராட்டங்களை நடத்தி வருகினறனர்.
எகிப்தில் போராட்டகாரர்களுக்கும் காவல்துறையினருக்கும் ஏற்பட்ட மோதலில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். டுனிஸியா, லெபனான், மற்றும் சுடானிலும் கலவரம் வெடித்துள்ளது.
கிழக்கு லிபியாவில் உள்ள பென்காழியில் உள்ள அமெரிக்க தூதரகங்களின் மீது கல் வீச்சு தாக்குதலும் நடத்தப்பட்டன. ஏமனில் இஸ்லாமியர்கள் நடத்திய போராட்டத்தில் அங்கிருந்த உணவகங்கள் தீயிட்டு எரிக்கப்பட்டது.
பாதுகாப்புக்காக வாஷிங்டனில் இருந்து அமெரிக்க கடற்படை லிபியா மற்றும் யேமன் தூதரகங்களில் நிறுத்தப்பட்டுள்ளன. மொவ்ரிடானியா, இந்தோனேஷியாவிலும் மக்கள் தெருக்களில் இறங்கி அமெரிக்காவுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
இதனிடையே லிபியாவில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் ஏற்பட்ட தாக்குதலில் பலியான அமெரிக்க தூதர் கிறிஸ்டோபர் ஸ்டீவன்ஸ் உள்பட 3 ஊழியர்களின் உடல்கள் அமெரிக்கா கொண்டு செல்லப்பட்டது.