1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. உலகச் செய்திகள்

நபிகள் நாயகத்தை விமர்சிக்கும் சர்ச்சைக்குரிய திரைப்படத்தின் தயாரிப்பாளர் கைது

கலிபோர்னியா
நபிகள் நாயகத்தை விமர்சிக்கும் படத்தை தயாரித்த நகோலா பேஸ்லி அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கலிபோர்னியா மாகாணத்தைச் சேர்ந்த அவருக்கு, கடந்த 2010ம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கு ஒன்றில் 21 மாத சிறைத் தண்டனையுடன், இணையதளத்தை பயன்படுத்த 5 ஆண்டு கால தடையும் விதிக்கப்பட்டிருந்தது.

இந்த தடையை நகோலா பேஸ்லி 8 முறை மீறியதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதன் அடிப்படையில், தற்போது கைது செய்யப்பட்டுள்ள நகோலா பேஸ்லிக்கு 2 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை கிடைக்கலாம் என்று தெரிகிறது.

இணையதளத்தை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டதால், நகோலா பேஸ்லி வேறு பெயரில் யூ டியூப்-இல் நுழைந்து, முகமது நபிகளை விமர்சிக்கும் திரைப்படத்தை பதிவேற்றம் செய்ததாக புலனாய்வுத் துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.
About Writer
Webdunia