1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. உலகச் செய்திகள்

ஐரோப்பிய ஒன்றியத்துக்கு அமைதிக்கான நோபல் பரிசு

2012
2012ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு ஐரோப்பிய ஒன்றியத்துக்கு வழங்கப்படுகிறது. மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸிற்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படும் என்று பலராலும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இன்று நார்வே தலைநகர் ஓஸ்லோவில் அமைதிக்கான நோபல் பரிசு குறித்து அறிவிப்பு வெளியானது.

அதன்படி, உலக அமைதிக்காகவும், மக்களுக்காகவும், தன்னலமற்ற சேவையாற்றுபவர்களுக்கு வழங்கப்படும் அமைதிக்கான நோபல் பரிசு இந்த ஆண்டு ஐரோப்பிய ஒன்றியத்துக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே, மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம் ஆகிய துறைகளில் நோபல் பரிசு பெறுபவர்களின் விவரம் அறிவிக்கப்பட்டுவிட்டது.

ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 10ம் தேதியன்று நோபல் பரிசுகள் வழங்கப்படுவது வழக்கம்.

உலகம் முழுவதும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய அமைதிக்கான நோபல் பரிசு நார்வேயில் இன்று அறிவிக்கப்பட்டது. 27 நாடுகள் கொண்ட ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு வழங்கப்படுவதாக நோபல் பரிசு தேர்வுக்குழு தலைவர் ஜார்க்லேண்ட் அறிவித்தார். ஐரோப்பிய கண்டம் முழுவதும் அமைதி மற்றும் சமரசம் ஏற்பட பாடுபட்டதற்காக இந்த விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் உலகம் முழுவதும் கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்தபோது, இந்த ஒன்றியத்தில் உள்ள நாடுகள் இணைந்து திறம்பட சமாளித்துள்ளன. எனவே, இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு இந்த ஒன்றியத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.