மூழ்கியது நியூயார்க்; சாண்டிக்கு 12 பேர் பலி
அட்லாண்டிக் கடலோர பகுதிகளில் மையம் கொண்ட சாண்டி புயல் நியூயார்க் மற்றும் நியூஜெர்சியை வரலாறு காணாத அளவிற்கு பாதித்துள்ளது. இது வரை 12 பேர் உயிரிழந்தனர்.
அமெரிக்காவின் கிழக்கு கடற்கரைப் பகுதியை தாக்கியுள்ள சாண்டி புயலால் அங்கு பல மாகாணங்கள் நீரால் சூழப்பட்டுள்ளது. 120 கி.மீ. வேகத்தில் சூறாவளியுடன் மழையும் பெய்துவரும் நிலையில் தாழ்வான பகுதியில் உயர்ந்த கட்டிடங்கள், வீடுகள் மூழ்கியுள்ளன.
கரீபியன் கடலில் உருவான சாண்டி புயல், ஜமைக்கா, கியூபாவை போன்ற பகுதிகளை நாசம் செய்த பின்னர் அமெரிக்காவை இந்த சாண்டி புயல், 1,600 கி.மீ. பரப்பளவில் தாக்கியுள்ளது.
இதுவரை நியூயார்க் நகரத்தில் மட்டும் 12 பேர் பலியாகியுள்ளனர். புயல் தாக்கும் அறிகுறிக்கு முன்னரே தாழ்வான பகுதிகளில் வாழும் மக்கள் அப்புறப்படுத்தப்பட்டனர். தகுந்த தற்காப்பு நடவடிக்கைகளையும் மீறி பல மாகாணங்கள் ஸ்தம்பித்துள்ளன. இதனால் நியூயார்க்கில் உள்ள அணுமின் நிலையம் உழார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
மேலும் மின் கம்கம்பங்கள் அறுந்து விழுந்துள்ளதால் பல இடங்களில் மின் அழுத்தங்கள் ஏற்பட்டதாக கூற்ப்பட்டுள்ளது. எனினும் இது குறித்த சேதங்கள் ஏதும் அறியப்படவில்லை. இதனால் நியூயார்க்கில் மின் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த மாகாண மேயர் மைக்கில் புளூம்பர்க் தெரிவித்துள்ளார்.
நியூயார்க், நியுஜெர்சி, பால்டிமோர், வடக்கு கரோலினா முதல் கனெக்டிகட் வரையில் அனைத்து நகரங்களும் இந்த சூறாவளியால் பெரும் சேதமடைந்துள்ளது. 12000த்திற்க்கும் மேற்பட்ட விமான சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன.
11 அடி உயரத்துக்கு கடலில் அலைகள் எழுமபி ஊருக்குல் கடல் நீர் புகுந்துள்ளதால் மன்ஹாட்டன் உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் பெரிதும் சேதமடைந்துள்ளன.
அதிபர் பராக் ஒபாமா நேற்று மக்களுக்கு முன்எச்சரிக்கை விடுத்திருந்தார். அவர் பேசுகையில், ‘இந்த புயலை மக்கள் சாதாரணமாக எடுத்து கொள்ளக் கூடாது, இது மிகப்பெரிய, ஆபத்தான புயல்’ என்று கூறினார்.
கடற்கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும், அதிகாரிகள் தெரிவிக்கும் வழிகாட்டுதலின்படி நடந்து கொள்ளும்படியும் ஒபாமா தெரிவித்திருந்தார்.
சூறாவளி சாண்டியால் அமெரிக்காவின் 10 மாகாணங்கள் நாசமடைந்துள்ளது. இதில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள மத்திய அட்லாண்டிக்கில் இருந்து கனடா வரையில் 5 கோடி மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு அனுப்பட்டுள்ளனர்.