மீண்டும் யு.எஸ். அதிபரானார் ஒபாமா
மீண்டும் அமெரிக்க அதிபராக ஒபாமா மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட ரோம்னிக் தோல்வியை தழுவினார்.
அமெரிக்காவில் மொத்தமுள்ள 538 வாக்குகளில் அமெரிக்க அதிபராக 270 தேர்வாளர்களின் வாக்குகளை பெறவேண்டும். அதிபர் தேர்தலுக்கான வாக்குப் பதிவு அமெரிக்க நேரப்படி நேற்று காலை 6 மணிக்கு துவங்கி இரவு 7 மணி வரை நடைபெற்றது.
இந்திய நேரப்படி இன்று அதிகாலை 5 மணிக்கு கென்டக்கி, இண்டியானா மாநிலங்களில் வாக்குப்பதிவு முடிவடைந்தது.
அதிபர் பதவிக்கான முடிவை தீர்மானிக்கும் புளோரிடா, ஒஹயோ, வர்ஜீனியா மாநிலங்களில் காலை 5.30 மணியளவில் வாக்குப்பதிவு முடிவடைந்தது.
இதில் குடியரசுக் கட்சி வேட்பாளர் மிட் ரோம்னி 203 தேர்வாளர்களின் வாக்குகளை பெற்றார். 280 தேர்வாளர்களின் வாக்குகள் பெற்ற ஜனநாயக கட்சி வேட்பாளர் ஒபாமா வெற்றி பெற்றார்.
மீண்டும் வெற்றி பெற செய்த வாக்காளர்களுக்கு ஒபாமா நன்றி தெரிவித்துள்ளார்.
டுவிட்டர் இணையதளம் மூலம் அதிபர் ஒபாமா நன்றி கூறியுள்ளார்.
ஒபாமா வெற்றியை அவரது ஆதரவாளர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.