Sri Lanka's Killing Fields: war Crimes Unpunished | பிரபாகரன் மகனை கொன்ற இலங்கை ராணுவம் - கொடூர காட்சிகளை வெளியிட்டது சேனல் 4
விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் பிரபாகரனின் இளைய மகன் கொடூரமாக கொல்லப்பட்ட காட்சிகளுடன் இலங்கை ராணுவத்தின் போர்க்குற்றம் தொடர்பான 2-வது ஆவணப்படத்தை வெளியிட்டுள்ளது சேனல் 4 தொலைக்காட்சி.
‘இலங்கையின் கொலைக்களம்: தண்டிக்கப்படாத போர்குற்றங்கள்’ என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ள இந்த ஆவணப்படத்தில், இலங்கையில் நடந்த இறுதிக்கட்ட போரின் போது, இனப்படுகொலை, மனித உரிமை மீறல்கள் குறித்த காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இந்திய நேரப்படி இன்று அதிகாலை 4.25 மணிக்கு ஒளிப்பரப்பான அந்த காணொளி சுமார் 53 நிமிடங்கள் ஒளிபரப்பானது. இதில், போர்க்கைதியாக பிடிபட்டவர்களை நிர்வாணப்படுத்தி, கைகள் கட்டப்பட்ட நிலையில் அவர்களை இலங்கை ராணுவத்தினர் சுட்டுக் கொல்லும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.
மேலும், விடுதலைப் புலிகள் இயக்க தலைவர் பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரன் கொல்லப்பட்டு கிடக்கும் காட்சி, புலிகளின் தொலைக்காட்சி செய்தியாளர் இசைப்பிரியா நிர்வாணமான நிலையில் சுட்டுக் கொல்லப்பட்டு கிடக்கும் புகைப்பட ஆதாரமும், இடம்பெற்றுள்ளது.
ராணுவத்தின் குண்டுவீச்சில் குழந்தைகள் படுகாயமடைந்த மற்றும் உயிரிழந்த சம்பவத்திற்கு ஆதாரமான காட்சிகளும் இந்த ஆவணப்படத்தில் இடம்பெற்றுள்ளன. போரற்ற பகுதிகளாக அறிவிக்கப்பட்ட இடங்களில் தஞ்சமடைந்த மக்களைக் கொன்று குவித்தது, பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருந்துகள், உணவு தராமல் கொடூரமாக சாக விட்டது உள்ளிட்ட பல்வேறு போர் குற்றச் செயல்களுக்கான ஆதாரங்களையும் சேனல் 4 தொலைக்காட்சியின் ஆவணப்படத்தில் இடம்பெற்றுள்ளது.
ஆவணப்படத்தின் இறுதியில், இலங்கையில் நடந்தகொடுமைகளுக்கு பன்னாட்டு சமுதாயம் என்ன தீர்வு காணப்போகிறது, என்ன தண்டனை தரப் போகிறது என்ற கேள்வியை எழுப்பியுள்ளது சேனல் 4 தொலைக்காட்சி.
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா தீர்மானம் கொண்டு வந்துள்ள நிலையில், இந்த புதிய ஆவணம் இலங்கை அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.