வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 27 அக்டோபர் 2024 (15:38 IST)

மக்கள் யாரை ஏற்றுக் கொள்கிறார்கள் என்பதுதான் முக்கியம்! - விஜய் குறித்து உதயநிதி ஸ்டாலின் பதில்!

Udhayanithi Vijay

இன்று தமிழக வெற்றிக் கழக மாநாடு நடைபெறும் நிலையில் நடிகர் விஜய்க்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

 

 

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு இன்று விக்கிரவாண்டியில் நடைபெறுகிறது. காலை முதலே தொண்டர்கள் வந்து குவிந்த நிலையில் மாநாடு குறித்த நேரத்திற்கு முன்பே தொடங்கியுள்ளது. 

 

தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டையொட்டி இன்று ஜெயம் ரவி, பிரபு, சூர்யா உள்ளிட்ட திரைப்பிரபலங்களும், எச்.ராஜா, சீமான் உள்ளிட்ட அரசியல் பிரபலங்களும் காலை முதலாக விஜய்க்கு தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வந்தனர். ஆனால் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், இதுகுறித்து எதுவும் பேசமல் இருந்து வந்தார்.
 

 

இந்நிலையில் தற்போது செய்தியாளர்களை சந்தித்த உதயநிதி ஸ்டாலின், நடிகர் விஜய்யின் த.வெ.க மாநாட்டிற்கு வாழ்த்து தெரிவித்தார். இதுகுறித்து பேசிய அவர் “விஜய் எனது நீண்ட கால நண்பர். சிறு வயதிலிருந்தே எனக்கு விஜய்யை நன்கு தெரியும். மக்கள் பணிதான் முக்கியம். மக்கள் யாரை ஏற்றுக் கொள்கிறார்கள் என்பதுதான் முக்கியம். நடிகர் விஜய்யின் புதிய முயற்சிக்கு வாழ்த்துகள்” என தெரிவித்துள்ளார்.

 

Edit by Prasanth.K