குக்கர் வெடிப்பு ஏற்படாமல் தடுப்பது எப்படி?

சமையலறையில் நாம் தொடர்ந்து பயன்படுத்தும் பிரஷர் குக்கரை கவனமாகப் பயன்படுத்தாவிட்டால் மிகவும் ஆபத்தானது. எப்படி குக்கரை பாதுகாப்பாக பயன்படுத்துவது என பார்ப்போம்.

Various Source

குக்கரை மூடுவதற்கு முன், வென்ட் டியூப் தடையில்லாமல் உள்ளதா எனச் சரிபார்க்கவும்

பாதுகாப்பு வால்வில் குறைபாடு இருந்தால், அதை மீண்டும் பயன்படுத்த வேண்டாம்

குக்கரின் பாதுகாப்பு வால்வுகளை சீரான இடைவெளியில் மாற்றுவது பாதுகாப்பானது

சமையலுக்கு ஊற்றப்படும் தண்ணீரின் அளவையும் சரியாக கவனித்துக் கொள்ள வேண்டும்

வாஷர் மற்றும் விசிலை ஒவ்வொரு நாளும் பயன்பாட்டிற்குப் பிறகு சுத்தம் செய்யப்பட வேண்டும்

அனைத்து ஆவியும் வெளியேறும் வரை குக்கரின் மூடியைத் திறக்க வேண்டாம்

ஐஎஸ்ஐ முத்திரை பெற்ற குக்கர்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்