1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: சனி, 26 அக்டோபர் 2024 (17:40 IST)

இந்தியாவின் 12 ஆண்டு சாதனையை காலி செய்த நியூசிலாந்து! - கொந்தளித்த ரசிகர்கள்!

India vs New Zealand test

இந்தியா - நியூசிலாந்து இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணி தோல்வி அடைந்துள்ளது ரசிகர்களை கோபத்தில் ஆழ்த்தியுள்ளது.

 

 

இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையேயான மூன்று போட்டி கொண்ட டெஸ்ட் தொடர் இந்தியாவில் நடந்து வருகிறது, இதில் முதல் டெஸ்ட் போட்டியிலேயே இந்திய அணி மோசமான தோல்வியை தழுவியது.

 

இந்நிலையில் தற்போது நடந்து வந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 259 ரன்களை குவித்த நிலையில் இந்திய அணி 156 ரன்களில் ஆட்டமிழந்தது.

 

தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸில் நியூசிலாந்து 255 ரன்களை குவித்த நிலையில் 359 ரன்கள் அடிக்க வேண்டிய கட்டாயத்தில் இறங்கிய இந்திய அணி 245 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதனால் நியூசிலாந்து 113 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன், டெஸ்ட் தொடரையும் கைப்பற்றியுள்ளது.

 

இதன்மூலம் கடந்த 12 ஆண்டு கால இந்திய டெஸ்ட் வரலாற்றில் இந்தியாவை சொந்த மண்ணில் எந்த அணியுமே வீழ்த்தியிராத சாதனையை நியூசிலாந்து முறியடித்துள்ளது. இந்திய அணியின் மோசமான ஆட்டம் குறித்து சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கோபமான பதிவுகளை இட்டு வருகின்றனர்.

 

Edit by Prasanth.K