1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
  4. Infinix Zero Flip 5G specs price and launching offers

இந்தியாவில் தனது முதல் Flip ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்திய Infinix! - Infinix Zero Flip 5G சிறப்பம்சங்கள்!

Infinix Zero Flip 5G

இந்தியாவில் மடிக்கக்கூடிய வசதி உள்ள Flip Smartphoneகளுக்கு வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் இன்பினிக்ஸ் நிறுவனம் தனது புதிய Infinix Zero Flip 5G ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

 

 

பொதுவாக சாம்சங் உள்ளிட்ட முன்னணி நிறுவன ஸ்மார்ட்போன்களின் விலையை விட இன்பினிக்ஸ் மாடல்கள் குறைந்த விலையில் இருக்கும். அதே போல இந்த Infinix Zero Flip 5G ஸ்மார்ட்போனும் மற்ற Flip ஸ்மார்ட்போன்களை விட குறைந்த விலையில் வெளியாகியுள்ளது.

 

Infinix Zero Flip 5G ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள்:

 
  • 6.9 இன்ச் அமோலெட் டிஸ்ப்ளே
  • 3.64 இன்ச் கவர் டிஸ்ப்ளே
  • மீடியாடெக் டைமென்சிட்டி 8020 சிப்செட்
  • 2.6 GHz ஆக்டாகோர் ப்ராசஸர்
  • 8 ஜிபி RAM
  • 512 ஜிபி இண்டெர்னல் மெமரி (மெமரி கார்டு வசதி இல்லை)
  • 50 MP + 50 டூவல் OIS கேமரா
  • 50 MP முன்பக்க செல்பி கேமரா
  • USB Type C, 5G, VoLTE, 
  • 4720 mAh பேட்டரி, 70 W பாஸ்ட் சார்ஜிங்
  • 10 W ரிவர்ஸ் சார்ஜிங்
 

இந்த Infinix Zero Flip 5G மாடல் வயலெட் கார்டன், ராக் ப்ளாக் ஆகிய 2 வண்ணங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ.49,999 ஆகும். ஆனால் அறிமுக விலையாக ரூ.44,999க்கு விற்பனை செய்யப்பட உள்ளது. இதன் விற்பனை அக்டோபர் 24ம் தேதி பகல் 12 மணிக்கு தொடங்க உள்ளது.

 

Edit by Prasanth.K

About Writer
Prasanth Karthick
அடுத்த கட்டுரையில்
தளபதியின் ரசிகர் என்ற பதவியே போதும்.. பொதுச்செயலாளராக இருக்க ஆசையில்லை! - புஸ்ஸி ஆனந்த் பேச்சு!