1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 27 அக்டோபர் 2024 (17:59 IST)

குழந்தையும் பாம்பும்..! அந்த பாம்பு யார்? மாநாட்டில் விஜய் சொன்ன குட்டி ஸ்டோரி!

Vijay

தமிழக வெற்றிக் கழக மாநாடு தொடங்கி நடந்து வரும் நிலையில் தற்போது பேசி வரும் விஜய் குட்டி ஸ்டோரியோடு தனது பேச்சைத் தொடங்கியுள்ளார்.

 

 

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு விக்கிரவாண்டியில் தொடங்கி நடந்து வருகிறது. மாநாட்டில் முதலில் கொடி ஏற்றப்பட்டு, கொள்கை விளக்க பாடல் வெளியிடப்பட்டது. பின்னர் கட்சியின் செயல் திட்டங்கள், கொள்கைகள் விளக்கப்பட்டன.

 

அதன் பின்னர் பேசத் தொடங்கிய நடிகர் விஜய் வழக்கம்போல ஒரு குட்டி ஸ்டோரியை சொல்லி பேசத் தொடங்கினார். அதில் பேசிய அவர் “ஒரு தாய்க்கு தன் குழந்தையை பார்க்கும்போது ஏற்படும் உணர்வை வார்த்தைகளால் சொல்ல முடியும். ஆனால் குழந்தையால் தன் தாயை பார்க்கும் மகிழ்ச்சியை வார்த்தையால் சொல்ல முடியாது. அப்படியான உணர்வுதான் எனக்கும்.

 

தாயை பார்த்து சிரிக்கும் அந்த குழந்தை முன்னால் ஒரு விஷப்பாம்பு நின்றாலும் அந்த குழந்தை பயப்படாமல் சிரிக்கும். அத்தோடு அந்த பாம்பையும் எடுத்து விளையாடும். மகிழ்ச்சியை தெரியாத அந்த குழந்தைக்கு பயம் மட்டும் தெரிந்துவிடுமா? அந்த பாம்புதான் அரசியல்.. அந்த குழந்தைதான் உங்களது நான்.. அரசியலுக்கு நாம குழந்தைதான்.. ஆனா பாம்பை பார்த்து எங்களுக்கு பயமில்ல” என்று பேசியுள்ளார்.

 

Edit by Prasanth.K