1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 25 அக்டோபர் 2024 (13:57 IST)

தலிபான் பயங்கரவாதிகள் நடத்திய பயங்கர தாக்குதலில்: 10 பாகிஸ்தான் அதிகாரிகள் பலி..!

பாகிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகள் நடத்திய பயங்கரத் தாக்குதலில் பத்து அதிகாரிகள் கொல்லப்பட்டதாக அந்நாட்டு காவல் துறை தெரிவித்துள்ளது. 
 
பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல் அதிகாரிகள் மீது சரமாரியாக துப்பாக்கி குண்டுகள் சுடப்பட்டதாகவும் கைக்குண்டுகளால் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. 
 
இதில் பத்து அதிகாரிகள் உயிரிழந்ததாக காவல்துறை அதிகாரி குறிப்பிட்டுள்ளார். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் தலிபான் அமைப்பு பொறுப்பேற்றதாகவும், தங்கள் அமைப்பைச் சேர்ந்த குரேஷி என்பவர் கொல்லப்பட்டதற்குப் பழிவாங்கும் நோக்கில் இந்த தாக்குதல் நடத்தியதாகவும் அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளது.
 
 ஆப்கானிஸ்தானை ஒட்டியுள்ள பஜோர் மாவட்ட எல்லையில் பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் குரேஷி கொல்லப்பட்டதற்குப் பழிவாங்கும் வகையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Edited by Mahendran