வியாழன், 16 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 20 அக்டோபர் 2024 (11:45 IST)

4 வயது சிறுமியை அடித்துக் கொன்ற சிறுத்தை! வால்பாறையில் அதிர்ச்சி! - சிறுத்தையை தேடும் வனத்துறை!

வால்பாறை தேயிலை தோட்டப்பகுதியில் 4 வயது சிறுமியை சிறுத்தை ஒன்று அடித்துக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

 

வால்பாறை பகுதியில் உள்ள ஊசிமலை தேயிலை தோட்டம் அருகே நடுமட்டம் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்த 4 வயது சிறுமி தேயிலை தோட்டப்பகுதியில் சென்றுக் கொண்டிருந்தபோது அங்கு மறைந்திருந்த சிறுத்தை சிறுமியை தாக்கியுள்ளது. உடனடியாக சிறுமி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்தார்.

 

சிறுமியின் உடல் வால்பாறை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. சிறுமியை சிறுத்தை தாக்கிக் கொன்ற சம்பவம் நடுமட்டம் மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ள நிலையில் அப்பகுதிக்கு விரைந்த வனத்துறை அதிகாரிகள் சிறுத்தையை கண்டுபிடிக்க சிசிடிவி கேமராக்களை பொருத்தியுள்ளனர். சிறுத்தை பதுங்குவதற்கு ஏதுவாக உள்ள புதர் பகுதிகள் கிராம மக்களால் அகற்றப்பட்டு வருகின்றன. சிறுத்தையின் நடமாட்டம் இருக்கும் இடத்தை அறிந்த பின் அங்கு கூண்டு வைத்து சிறுத்தையை பிடிக்க வனத்துறை திட்டமிட்டுள்ளது.

 

Edit by Prasanth.K