ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: சனி, 26 அக்டோபர் 2024 (10:32 IST)

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்.. அங்க மட்டும் கைய வெக்காதீங்க! - அமெரிக்கா விடுத்த எச்சரிக்கை!

ஈரான் மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் இஸ்ரேலுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.

 

 

இஸ்ரேல் - ஹமாஸ் இடையே நடந்து வரும் ஓராண்டு கால போரில், ஹமாஸ்க்கு ஆதரவாக ஹெஸ்புல்லா அமைப்பு இஸ்ரேலின் வடக்குப்பகுதியை தாக்கியது. ஹெஸ்புல்லாவுக்கு ஆயுத உதவிகள் செய்து வரும் ஈரான் நாடும் சமீபத்தில் இஸ்ரேல் மீது ட்ரோன், ஏவுகணைகள் மூலமாக தாக்குதல் நடத்தியது.

 

இதற்கு பதிலடியாக தற்போது இஸ்ரேல் ராணுவம் ஈரான் மீது வான்வழி தாக்குதலை நடத்தி வருகிறது. இதனால் இரு நாடுகளுக்கிடையேயான மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், ஈரான் ராணுவத்தை போருக்கு தயாராக இருக்கும்படி அல் கோமேனி தெரிவித்துள்ளார். 
 

 

ஈரானை இஸ்ரேல் தாக்கி வரும் நிலையில் ஈரானில் உள்ள அணு உலைகளை தாக்கிவிடும் அபாயம் உள்ளதால் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் அதிர்ச்சியடைந்துள்ளன. இதுகுறித்து இஸ்ரேலுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள அமெரிக்கா எக்காரணம் கொண்டும் ஈரானில் உள்ள அணு உலைகளில் தாக்குதல் நடத்திவிட வேண்டாம் என கூறியுள்ளது. மேலும் இஸ்ரேலின் தாக்குதலை கூர்ந்து கவனித்து வருவதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

 

Edit by Prasanth.K