செவ்வாய், 21 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 27 அக்டோபர் 2024 (13:42 IST)

விஜய்யின் விக்கிரவாண்டி மாநாடு! சுங்கச்சாவடிகளில் இலவச அனுமதி!

toll gate

தமிழக வெற்றிக் கழக மாநாட்டிற்காக ஏராளமான வாகனங்கள் வரும் நிலையில் சுங்க சாவடிகளில் கட்டணமில்லா அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

 

 

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு இன்று விக்கிரவாண்டியில் நடைபெறுகிறது. மாலை மாநாடு நடைபெற உள்ள நிலையில் காலை முதலே விக்கிரவாண்டி நோக்கி த.வெ.க தொண்டர்கள் படையெடுத்து வருகின்றனர்.

 

இதனால் சென்னை - விக்கிரவாண்டி ஜிஎஸ்டி சாலையில் விஜய் கட்சியின் கொடி கட்டிய கார்கள், வாகனங்கள் ஏராளமாக வந்துக் கொண்டிருக்கின்றன. இதனால் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு விக்கிரவாண்டி, உளுந்தூர்பேட்டை, ஓங்கூர் சுங்கச்சாவடிகளில் த.வெ.க கொடியுடன் வரும் வாகனங்கள் இலவசமாக அனுமதிக்கப்பட்டுள்ளன.

 

த.வெ.க வாகனங்கள் செல்ல தடுப்புகள் அகற்றி தனி பாதை அமைக்கப்பட்டுள்ளதால் மற்ற வாகனங்கள் முறையாக கட்டணம் செலுத்தி சுங்கச்சாவடிகளில் பயணித்து வருகின்றன.

 

Edit by Prasanth.K