செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Updated : ஞாயிறு, 27 அக்டோபர் 2024 (17:14 IST)

சமூக நீதியை நிலைநாட்ட நான் வரேன்.. த.வெ.க கொள்கை பாடல்! - கொள்கை தலைவர்கள் அறிவிப்பு!

தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு நடந்து வரும் நிலையில் த.வெ.கவின் கொள்கை பாடல் வெளியாகியுள்ளது.

 

 

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு விக்கிரவாண்டியில் நடந்து வருகிறது. கட்சி தலைவர் விஜய் பிரம்மாண்டமான கட்சி கொடியை ஏற்றி வைத்ததை தொடர்ந்து கட்சியின் கொள்கைப்பாடல் வெளியிடப்பட்டது.

 

அதில் விஜய்யே பேசும் சில வசனங்கள் இடம்பெற்றுள்ளன. அதில் “என் நெஞ்சில் குடியிருக்கும்” என்ற தனது வழக்கமான வசனத்தை பேசியுள்ள நடிகர் விஜய், பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற திருவள்ளுவரின் கூற்றுப்படி அனைவரும் சமம் என்ற கருதுகோளுடன் தமிழக வெற்றிக் கழகம் தொடங்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

 

மேலும் அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார், காமராஜர், அஞ்சலை அம்மாள் மற்றும் வேலுநாச்சியார் ஆகிய தலைவர்களை தமிழக வெற்றிக் கழகம் கொள்கை தலைவர்களாக கொள்வதாக அந்த பாடலில் அறிவித்துள்ள விஜய், சமத்துவ சமூக நீதி சமுதாயத்தை நிலைநாட்ட நான் வரேன் என பேசியுள்ளார்.

 

Edit by Prasanth.K