மாதுளம் பூ பொடியை தேனில் கலந்து சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா?

மாதுளை இலைகள், பூக்கள், பழங்கள், விதைகள் மற்றும் பட்டை அனைத்தும் மருத்துவ குணம் கொண்டவை. குறிப்பாக மாதுளம் பூக்களின் நன்மைகளை தெரிந்து கொள்வோம்.

Various Source

மாதுளம் பூவை அரைத்து அரை அவுன்ஸ் தேனில் கலந்து காலை மாலை சாப்பிட்டு வந்தால் செரிமானக் கோளாறுகள் தீரும்.

மாதுளம் பூவை நிழலில் உலர்த்தி தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் உடல் வலிமை பெறும்.

மாதுளம் பூ கஷாயம் பெண்களுக்கு ஏற்படும் பல நோய்களைத் தடுக்கும்.

மாதுளம் பூவை பனை வெல்லத்துடன் கலந்து குடித்து வந்தால் வாயு பிரச்சனை குறைவதுடன் பசியும் அதிகரிக்கும்.

இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தும் சக்தி மாதுளைப் பூக்களுக்கு உண்டு.

குறிப்பு: இந்த தகவல் ஆரோக்கிய நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகிறது. மேலும் தகவலுக்கு ஒரு மருத்துவ நிபுணரை அணுகவும்.