1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 27 அக்டோபர் 2024 (14:38 IST)

முன்கூட்டியே தொடங்கும் தவெக மாநாடு.. ஓயாத தொண்டர்கள் கூட்டம்! - என்ன நடக்கிறது?

TVK Maanadu

விக்கிரவாண்டியில் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டிற்கு ஏராளமான தொண்டர்கள் குவிந்த நிலையில் திட்டமிட்ட நேரத்திற்கு முன்னதாகவே மாநாடு தொடங்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

 

 

விஜய்யின் தமிழக வெற்றிக் கழக மாநாடு இன்று விக்கிரவாண்டியில் நடைபெறுகிறது. மாலை 4 மணி அளவில் மாநாடு தொடங்கும் என கூறப்பட்டிருந்த நிலையில் காலை முதலே தொண்டர்கள் விக்கிரவாண்டி நோக்கி படையெடுத்து வருகின்றனர்.

 

தற்போது மதிய வெயிலில் ஏராளமான தொண்டர்கள் பிளாஸ்டிக் சேர்களை தலையில் சுமந்து வெயிலில் காத்திருக்கின்றனர். பல தொண்டர்கள் மயங்கி விழுந்து வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கிட்டதட்ட தற்போது 90 சதவீதம் மாநாடு அரங்கு நிறைந்துவிட்ட நிலையில் 4 மணிக்கு தொடங்க இருந்த மாநாடு 3 மணிக்கே தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Edit by Prasanth.K