வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 25 அக்டோபர் 2024 (12:57 IST)

156 ரன்களில் ஆல் அவுட்.. மீண்டும் இந்தியா மோசமான தோல்வி! - இந்த மேட்ச்சும் அவ்ளோதானா?

India vs new zealand

முதல் டெஸ்ட்டில் அடைந்த மோசமான தோல்வியை போலவே இரண்டாவது டெஸ்ட்டில் சொற்ப ரன்களில் அவுட் ஆகியுள்ளது இந்திய அணி.

 

 

இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையேயான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இந்தியாவில் நடந்து வரும் நிலையில் முதல் போட்டியில் நியூசிலாந்து அபார வெற்றி பெற்றது. தற்போது நடந்து வரும் இரண்டாவது டெஸ்ட்டிலும் நியூசிலாந்தின் கையே ஓங்கியுள்ளது.

 

முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 79 ஓவர்களில் 259 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதை தொடர்ந்து இந்தியா பேட்டிங் இறங்கிய நிலையில், ரோஹித் சர்மா டக் அவுட் ஆன நிலையில், விராட் கோலி 1 ரன்னில் அவுட் ஆனார், ஜெய்ஸ்வாலும், சுப்மன் கில்லும் தலா 30 ரன்கள் அடித்து அவுட் ஆனார்கள். 
 

 

அடுத்தடுத்து வரிசையாக விக்கெட் விழத் தொடங்கவே ரிஷப் பண்ட் (18), சர்ப்ராஸ் கான் (11), ஜடேஜா (38), அஸ்வின் (4), வாஷிங்டன் சுந்தர் (18), ஆகாஷ் தீப் (6) என அனைவரும் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து அவுட் ஆனார்கள். பாதி நாளிலேயே முடிந்துவிட்ட இந்த முதல் இன்னிங்ஸில் வெறும் 156 ரன்களை மட்டுமே இந்தியா பெற்றுள்ளது. 

 

இதனால் இந்தியா இரண்டாவது டெஸ்ட்டில் வெற்றி பெறுவதும் எட்டாக்கனியாக மாறியுள்ளது. இந்திய அணி தொடர்ந்து மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், நியூசிலாந்து தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியுள்ளது.

 

Edit by Prasanth.K