இந்த படத்தில் அரசியல் வேண்டாம்… இயக்குனருக்கு கட்டளையிட்ட விஜய்!

Last Modified செவ்வாய், 15 செப்டம்பர் 2020 (16:15 IST)

விஜய் நடிப்பில் முருகதாஸ் இயக்க இருக்கும் விஜய் 65 படத்தில் அரசியல் கருத்துகள் எதுவும் இருக்க வேண்டாம் என்று இயக்குனருக்கு விஜய் அன்புக் கட்டளை இட்டுள்ளாராம்.

தளபதி விஜய் நடிப்பில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்க இருக்கும் திரைப்படத்தை பிரபல இயக்குநர் ஏஆர் முருகதாஸ் அவர்கள் இயக்க உள்ளார் . இந்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பி விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் சில காரணங்களால் இன்னும் அறிவிப்பு வெளியாகவில்லை. இதனால் விரைவில் அதிகாரப் பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது இந்த படம் பொங்கலுக்குப் பின்னர்தான் ஆரம்பிக்கப் பட உள்ளதாக சொல்லப்படுகிறது.

விஜய் முருகதாஸ் கூட்டணியில் உருவான கத்தி மற்றும் சர்கார் ஆகிய படங்களில் அரசியல் கருத்துகள் சொல்லப்பட்டன. இதனால் சர்ச்சைகள் உருவாகி ஆளும்கட்சியிடம் இருந்து எதிர்ப்பு உருவாக, அதுவே படத்துக்காக பப்ளிசிட்டியாக அமைந்தது. அதனால் இந்த படத்திலும் அதுபோல காட்சிகளை வைத்து பரபரப்பாக திரைக்கதை அமைக்கலாம் என முருகதாஸ் திட்டமிட, விஜய் அரசியல் கருத்துகள் எதுவும் வேண்டாம் என சொல்லிவிட்டதாக சொல்லப்படுகிறது.இதில் மேலும் படிக்கவும் :