ஞாயிறு, 28 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 12 ஏப்ரல் 2024 (10:05 IST)

ஐபோன் பயனாளர்களே உஷார்! உளவு பார்க்கும் புதிய மால்வேர்!? – ஆப்பிள் எச்சரிக்கை!

ஐபோனில் உளவுபார்க்கும் புதிய மால்வேர் பரவும் அபாயம் உள்ளதாக கூறப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



உலகம் முழுவதும் அதிகமாக ஆண்ட்ராய்டு போன்கள் பயன்பாட்டில் இருந்தாலும் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்களை வாங்குவது பலருக்கு கனவாக உள்ளது. ஆப்பிளின் ஐஓஎஸ் இயங்குதளத்தில் மிகவும் குறைவான அப்ளிகேசன்களே அனுமதிக்கப்படுகின்றன. தனது பயனாளர்களை எலைட்டான சர்வீஸை ஆப்பிள் வழங்கி வருகிறது.

ஆனால் மால்வேர் போன்ற வைரஸ்கள் ஆப்பிளையும் விட்டு வைப்பதில்லை. கடந்த ஆண்டில் இஸ்ரேலின் பெகாசஸ் உளவு மென்பொருள் ஆப்பிள் ஐபோன்களின் தகவல்களை திருடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் ஐபோன்களை குறிவைத்து புதிய உளவு வைரஸ் பரவி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுகுறித்து இந்தியா உள்பட 91 நாடுகளில் உள்ள ஐபோன் பயனாளர்களுக்கு ஆப்பிள் விரைவில் எச்சரிக்கை மெயில் அனுப்ப உள்ளதாக கூறப்படுகிறது. இது ஐபோன் பயனாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Edit by Prasanth.K