1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 14 மே 2024 (16:39 IST)

மனசுல எதுவும் வச்சுக்காதீங்க.. கே.எல்.ராகுலுக்கு விருந்து வைத்த லக்னோ அணி உரிமையாளர்..!

சமீபத்தில் லக்னோ அணி உரிமையாளர் கே எல் ராகுலை திட்டியது போன்ற வீடியோ இணையத்தில் வைரல் ஆன நிலையில் தற்போது அவரை சமாதானப்படுத்தும் வகையில் விருந்து வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்தில் ஹைதராபாத் அணிக்கு எதிராக நடந்த போட்டியில் லக்னோ அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்த நிலையில் கேப்டன் கே எல் ராகுலை லக்னோ அணி உரிமையாளர் ஆவேசமாக திட்டிய வீடியோ இணையத்தில் வெளியான நிலையில் அந்த வீடியோவுக்கு நெட்டிசன் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது

இந்த நிலையில் கே எல் ராகுலுக்கு ஆதரவாக ஏராளமான குரல்கள் எழுந்த நிலையில் இது குறித்து லக்னோ அணி உரிமையாளர் விளக்கம் அளித்துள்ளார். அந்த விளக்கத்தில் அவர் தான் ஆத்திரமாக எதுவும் பேசவில்லை என்று தெரிவித்திருந்தார்

இந்த நிலையில் கே எல் ராகுலை தனது இல்லத்திற்கு வரவழைத்து லக்னோ அணி உரிமையாளர் விருந்து வைத்ததாகவும் இந்த விருந்தின் போது கேஎல் ராகுலை கட்டிப்பிடித்து மனதில் எதுவும் வைத்துக் கொள்ள வேண்டாம் என்று கூறியதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன

இதுகுறித்து லக்னோ அணியின் பயிற்சியாளர் கூறிய போது லக்னோ அணி உரிமையாளருக்கும் கேஎல் ராகுலுக்கும் இடையேயான உரையாடல் உணர்ச்சிப்பூர்வமான பரிமாற்றம் மட்டுமே என்றும் வேறு எந்த பிரச்சனையும் இல்லை என்றும் வீடியோ வைத்துக் கொண்டு எதையும் நீங்களாக கற்பனை செய்து கொள்ள வேண்டாம் என்றும் தெரிவித்து இருந்தார்.

Edited by Mahendran