சுவையான வாழைப்பழ அல்வா வீட்டிலேயே செய்யலாம்!

வாழைப்பழம் அனைத்து சீசன்களில் குறைந்த விலையில் கிடைக்கும் ஆரோக்கியமான பழமாகும். வாழைப்பழத்தைக் கொண்டு சுவையான அல்வா செய்வது எப்படி என பார்க்கலாம்.

Various Source

தேவையான பொருட்கள்: வாழைப்பழம், சோள மாவு, பால், நெய், முந்திரி, ஏலக்காய், சர்க்கரை

10 வாழைப்பழங்களை தோல் உரித்து பாத்திரத்தில் போட்டு நன்றாக மசித்துக் கொள்ள வேண்டும்

கடாயில் நெய் விட்டு முந்திரி பருப்பு போட்டு பொன்னிறமாக வறுத்துக் கொள்ள வேண்டும்.

2 தேக்கரண்டி சோள மாவில் பால் சேர்த்து கட்டி வராமல் கரைத்துக் கொள்ள வேண்டும்.

Various Source

அதனுடன் வாழைப்பழ மசியலை சேர்த்து கடாயில் வைத்து நன்றாக வேகவிட வேண்டும்.

பின்னர் அதனுடன் வறுத்த முந்திரி, ஏலக்காய், சர்க்கரை சேர்த்து அடிபிடிக்காமல் தொடர்ந்து கிளற வேண்டும்

நெய் பிரிந்து பாத்திரத்தில் ஒட்டாத பதம் வரும்போது இறக்கி தட்டில் பரப்பி ஆறவிட்டால் சூப்பரான சுவையான வாழைப்பழ அல்வா ரெடி.