1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 14 மே 2024 (18:45 IST)

நாகினி டான்ஸ் ஆட ரெடியா? உலகக்கோப்பை டி20 வங்கதேச அணி அறிவிப்பு!

Naagin Dance
ஐசிசி உலக கோப்பை போட்டிகள் அடுத்த மாதம் தொடங்க உள்ள நிலையில் வங்கதேச வீரர்கள் பட்டியலை வங்கதேச கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது.



ஐசிசி உலக கோப்பை போட்டிகள் ஜூன் 2 முதல் தொடங்கி நடைபெற உள்ளது. இதில் மொத்தம் 20 நாடுகளை சேர்ந்த அணிகள் 4 பிரிவுகளாக போட்டிகளை எதிர்கொள்ள உள்ளனர். இந்நிலையில் பல நாட்டு கிரிக்கெட் அணிகளும் தங்கள் அணிக்கான உலக கோப்பை வீரர்களை அறிவித்திருந்த நிலையில் இன்று வங்கதேசமும் தங்களது அணி வீரர்களை அறிவித்துள்ளது.

வங்கதேச அணி: நஜ்முல் ஹுசைன் (கேப்டன்), தஷ்கின் அஹமது (துணை கேப்டன்), லிட்டன் தாஸ், சௌமியா சர்கார், தன்ஷித் தமிம், ஷஹிப் அல் ஹசன், தவ்ஹித் ஹ்ரிதாய், முகமது உல்லாஹ், ஜேகர் அலி, தன்விர் இஸ்லாம், மஹெதி ஹசன், ரிஷத் ஹுசைன், முஸ்தபிசுர் ரஹ்மான், ஷொரிபுல் இஸ்லாம், தன்சிம் சாகிப்

வங்கதேச அணி Team D பிரிவில் தென்னாப்பிரிக்கா, இலங்கை, நேபாளம் மற்றும் நெதர்லாந்து அணிகளை எதிர்கொள்ள உள்ளது. வங்கதேசம் – இலங்கை போட்டிகள், இந்தியா – பாகிஸ்தான் மேட்ச் போல பரபரப்பானவை என்பதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Edit by Prasanth.K