லட்டு என்றாலே குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். பலவிதமான பொருட்களிலும் லட்டு செய்ய முடியும். சத்துக்கள் நிறைந்த உளுந்தை கொண்டு சுவையான லட்டு எப்படி செய்வது என பார்க்கலாம்.
Various Source
தேவையான பொருட்கள்: கருப்பு உளுந்து, பொட்டுக்கடலை, கருப்பட்டி, ஏலக்காய் தூள், தேங்காய்த்துருவல், நெய்
கடாயில் கருப்பு உளுந்தை போட்டு நன்றாக வறுத்து அதனுடன் பொட்டுக்கடலையை சேர்த்து மிதமாக வறுத்து இறக்க வேண்டும்.
வறுத்த உளுந்து, பொட்டுக்கடலையை ஆறவைத்து மிக்ஸியில் போட்டு நன்றாக அரைக்க வேண்டும்.
கருப்பட்டியை உடைத்து தூளாக்கி அதனுடன் தண்ணீர் சேர்த்து கரைத்து வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்,
Various Source
அரைத்த உளுந்து மாவுடன் கருப்பட்டி தண்ணீர் சேர்த்து பிசைந்துக் கொள்ள வேண்டும்.
அதனுடன் ஏலக்காய் தூள், தேங்காய் துறுவல் சேர்த்து கிளறி நெய் விட்டு சின்ன சின்ன உருண்டைகளாக உருட்டி எடுத்தால் உளுந்து லட்டு தயார்.
உளுந்து உடலின் எலும்புகளுக்கும், மூட்டுகளுக்கும் வலிமையை தரக்கூடியது. இதை குழந்தைகளுக்கும் கொடுக்கலாம்.